Published : 28 Jan 2022 07:36 PM
Last Updated : 28 Jan 2022 07:36 PM

அதிமுக வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.பி. நவநீத கிருஷ்ணன் விடுவிப்பு

சென்னை: அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பிலிருந்து எம்.பி. நவநீத கிருஷ்ணன் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், ”அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் எம்.பி. நவநீதகிருஷ்ணன் இன்றுமுதல் விடுவிக்கவிக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 27 ஆம் தேதி திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இல்லம் திருமணத்தில் கலந்து கொண்ட அதிமுக எம்.பி. நவநீதி கிருஷ்ணன் கனிமொழி உள்ளிட்ட திமுக எம்.பி.களைப் புகழ்ந்து பேசியிருந்தார்.

இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இந்த நிலையில் நவநீதகிருஷ்ணன் அதிமுகவின் முக்கிய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x