Published : 22 Jan 2022 10:46 AM
Last Updated : 22 Jan 2022 10:46 AM

மதுரை சிறையில் 20 ஆண்டாக கைதியாக இருந்தவர் மரணம்: நிவாரணம் கேட்டு குடும்பத்தினர் கோரிக்கை

மதுரை மத்திய சிறையில் 20 ஆண்டுகளாக தண்டனைக் கைதியாக இருந்தவர் மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினர் உரிய நிவாரணம் வழங்கக்கோரி உள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பாச் சேத்தியைச் சேர்ந்தவர் முத்து(60). இவர் 1997-ல் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை மத்திய சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிறை நன்னடத்தை அடிப்படையில், அவரை விடுதலை செய்ய முயற்சி மேற்கொண்டும், அவருக்கு சிறையில் இருந்து விடுதலையாக வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் நரம்புக்கோளாறால் உடல்நிலை பாதித்த நிலையில் அவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முத்து உயிரிழந்தார். அவரது உடல் இன்று நீதிபதி முன்னிலையில் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

இதற்கிடையே, தொடர்ந்து சிறையில் வைத்திருந்ததால் முத்து உயிரிழந்தார் எனக் கூறி, தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து முத்து தரப்பு வழக்கறிஞர் கார்த்திக் கூறியதாவது:

சிறையில் 14 ஆண்டுகளைக் கடந்தாலே நன்னடத்தை அடிப் படையில் விடுவிக்கலாம். அதற்கான முயற்சி எடுத்தும் முடியவில்லை. தடை செய்த ஆயுதங்களை பயன் படுத்தியதாக, அவரை விடுவிக்க மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து சிறையில் இருந்த முத்துவுக்கு 6 மாதத்துக்கு முன்பு உடல்நலம் பாதித்தது. ஆனால், உரிய சிகிச்சை அளிக்கவில்லை. வறுமையில் வாடும் அவரது குடும்பத்தினருக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x