Published : 07 Apr 2016 08:21 AM
Last Updated : 07 Apr 2016 08:21 AM

போலீஸார் தாக்கியதால் கடலூர் ரவுடி பலியான வழக்கு: ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

போலீஸார் சரமாரியாக தாக்கிய தால் கடலூர் ரவுடி பலியான வழக் கில் சம்பந்தப்பட்ட போலீஸ் ஆய் வாளர், உதவி ஆய்வாளர், தலை மைக் காவலர் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் முத்துலிங்கம்(34). ரவுடியான இவர் மீது கடலூர், நெய்வேலி மற்றும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல திருட்டு வழக்குகள் உள்ளன. வளசரவாக்கத்தில் 35 பவுன் நகை திருடுபோனது குறித்து முத்துலிங் கத்தை சென்னை வடபழனி போலீ ஸார் கடந்த 2011-ல் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். திருடிய நகை விழுப்புரத்தில் இருப்பதாக முத்துலிங்கம் கூறிய தகவல் அடிப்படையில் போலீஸார் அங்கு சென்றபோது அங்கு நகை கிடைக்கவில்லை. மீண்டும் முத்து லிங்கத்திடம் விசாரித்தபோது நகை வளசரவாக்கத்தில் உள்ள ஒரு தெரிந்த நபரிடம் இருப்பதாக தெரி வித்ததையடுத்து, மீண்டும் முத்து லிங்கத்தை வளசரவாக்கத்துக்கு போலீஸார் அழைத்து வந்துள்ளனர்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி யோட முயன்ற முத்துலிங்கத்தை, போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாமல், 2 நாட்களாக போலீஸ் வாகனத்தில் வைத்தே பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். விருகம்பாக்கம் அருகே வந்த போது நெஞ்சுவலியால் துடித்த முத்துலிங்கத்தை போலீஸார் ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், முத்துலிங்கம் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக விரு கம்பாக்கம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதில் தொடர்புடைய வடபழனி ஆய்வாளர் நடேசன், உதவி ஆய் வாளர் மூர்த்தி, தலைமைக் காவலர் முருகேசன் மற்றும் போலீஸ்காரர் கள் அசோக்குமார், ராஜமோகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

நேற்று இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட 16-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி மாவீத் தீபிகா சுந்தரவதனா, குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர் மூர்த்தி, தலைமைக் காவலர் முருகேசன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து பரபரப்பு தீர்ப்பு கூறினார். போலீஸ்காரர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.

தண்டனை விதிக்கப்பட்ட மூவ ரும் ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x