Published : 20 Jan 2022 09:57 AM
Last Updated : 20 Jan 2022 09:57 AM

ஆரணியில் ஜாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி ஆட்சியரை முற்றுகையிட்ட கணிக்கர்கள்

ஆரணியில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மாவட்ட ஆட்சி யரை கணிக்கர்கள் நேற்று முற்று கையிட்டு மனு அளித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலு வலக கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்த படி முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சி யில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் புறப்பட தயாரானார். அப்போது, அவரது காரின் அருகே ஆரணி பள்ளிகூடத் தெருவில் வசிக்கும் கணிக்கர் இனத்தைச் சேர்ந்தவர்கள் திடீரென ஆட்சியரை முற்றுகையிட்டு ஜாதிச்சான்று வழங்க கோரினர்.

அவர்கள் அளித்த மனுவில், ‘‘ஆரணியில் சுமார் 50 ஆண்டு களுக்கும் மேலாக 45 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்கள் பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க ஜாதி சான்றிதழ் இல்லாத காரணத்தால் பள்ளியில் சேர்க்க முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த காலங்களில் மாவட்ட நிர்வாகத்துக்கு பலமுறை மனு அளித்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என குறிப்பிட்டிருந்தனர்.

அவர்களின் கோரிக்கை தொடர் பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மனுவை பெற்றுக்கொண்டு விசாரித்ததுடன் ‘‘கணிக்கர் இனத்தில்ஜாதிச் சான்றிதழ் கேட்டுள்ளீர்கள். மாவட்ட அளவில் இதுவரை எவருக்கும் கணிக்கர் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.

எனவே, இதுகுறித்து ஆதி திராவிட நலத்துறை ஆணை யத்துக்கு அனுப்பி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்தார்.

இதனையேற்ற கணிக்கர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x