Published : 12 Jan 2022 10:58 AM
Last Updated : 12 Jan 2022 10:58 AM

பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாதுகாப்பில் 2 ஆயிரம் போலீஸார்: மதுரை எஸ்.பி. பாஸ்கரன் தகவல்

அலங்காநல்லூர், பாலமேடு ஜல் லிக்கட்டுப் போட்டிக்கான பாது காப்பில் 2 ஆயிரம் போலீஸார் ஈடு படுத்தப்படுவர் என மதுரை எஸ்.பி. வீ.பாஸ்கரன் தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையை முன் னிட்டு மதுரை மாவட்டம், அவனி யாபுரத்தில் ஜன.14, பாலமேட்டில் ஜன.15, அலங்காநல்லூரில் ஜன.17 ஆகிய நாட்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

கரோனா பரவலைத் தொடர்ந்து அரசு பல்வேறு கட்டுப் பாடுகளுடன் ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி வழங்கி உள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு மாநகர் போலீஸாரும், பாலமேடு, அலங்காநல்லூரில் மாவட்ட போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பாலமேடு, அலங் காநல்லூரில் பார்வையாளர் மாடம் அமைப்பது உள்ளிட்ட வசதிகளைச் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. இதை ஆய்வு செய்த எஸ்.பி. வீ.பாஸ்கரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர், ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் காண உள்ளூர் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதற்கு அவர்களிடம் ஏதாவது ஓர் அடையாள ஆவணம் இருக்க வேண் டும். மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான் றிதழும் வைத்திருக்க வேண்டும். வெளியூர் பார்வையாளர்கள் வரு வதைத் தடுக்க ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைக்கப்படும். காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் என 2 பேர் மட்டுமே காளையுடன் வரவேண்டும். கூடுதல் நபர்கள் வந்தால் வெளியேற்றப்படுவதுடன் காளையும் போட்டியில் அனுமதிக்கப்படாது என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x