Last Updated : 04 Jan, 2022 10:37 AM

 

Published : 04 Jan 2022 10:37 AM
Last Updated : 04 Jan 2022 10:37 AM

உறுதியிழந்து, குண்டும் குழியுமாக மாறிவிட்ட திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க ரூ.6.5 கோடி: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளத் திட்டம்

திருச்சி காவிரி ஆற்றுப் பாலத்தில் சேதமடைந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு.படம்: ஜி.ஞானவேல்முருகன்

திருச்சி

கட்டுமானம் உறுதியிழந்து, குண் டும் குழியுமாக மாறிவிட்ட திருச்சி காவிரி பாலத்தை சீரமைக்க ரூ.6.5 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

திருச்சி சிந்தாமணியையும், மாம்பழச் சாலையையும் இணைக் கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1976-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. மாநகரின் முக்கிய அடையாளச் சின்னங்க ளுள் ஒன்றாக விளங்கும் இப்பாலம் கடந்த 2016-ல் 1.70 கோடி மதிப்பில் சீரமைக்கப்பட்டது. அப்போது பாலத்தின் அடிப்பகுதியை உறுதிபடுத்துவது, புதிதாக சாலை அமைப்பது, இருபுறமும் நடை பாதை அமைப்பது, பக்கவாட்டு கைப்பிடிச் சுவர் கட்டுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இக்கட்டுமான பணிகள் தரமின்றி இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவுப்படி ரூ.35.78 லட்சம் செலவில் மீண்டும் சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. ஆனாலும், வாகனங்கள் சென்றுவர உகந்ததாக இல்லை. பாலத்தில் ஆங்காங்கே உள்ள இரும்பு காரிடர்களில் பிளவு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

எனவே, இப்பாலத்தை மீண் டும் சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, சேதமடைந்த இப்பாலத்துக்கு பதிலாக, அருகி லேயே புதிய பாலம் கட்டப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித் தார். ரூ.150 கோடி செலவில் இப் பணிகளை மேற்கொள்வதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் தொடங்கியுள்ளன.

இந்த சூழலில் தற்போது பயன்பாட்டிலுள்ள காவிரி பாலத்தில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட் டன. இந்த இடங்களில் வாகனங் கள் செல்லும்போது ஏற்படக் கூடிய அதிர்வுகளால், பாலத்திலும் லேசான விரிசல் ஏற்பட்டு அதன் உறுதித்தன்மை கேள்விக்குறி யானது. மேலும் இரும்பு காரி டர்கள் இணையக்கூடிய பகுதி யில், பயணிக்கும்போது தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டதால், முன்னெச் சரிக்கையாக காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அந்த இடங்களில் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. புதிய பாலம் கட்டி முடிக்கும் வரை, உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசு ரூ.6.5 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பாலத்திலுள்ள இரும்பு காரிடர் களை மாற்றிவிட்டு புதிதாக அமைப் பது, பாலத்தின் மேல் பகுதியை யும், தூண் பகுதியையும் இணைக் கும் இடத்தில் அதிர்வுகளை தாங்கக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கட்ட மைப்பை மேற்கொள்வது, பாலத்தின் தூண்களில் ஏற்பட் டுள்ள விரிசல்களை சரி செய்து, மண் அரிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் கான்கிரீட் தரைத்தளம் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. நவீன தொழில்நுட்பங்கள் மூலம் சீரமைப்புப் பணிகள் தொடங்கி விடும். இதனால், மேலும் 20 ஆண்டுகளுக்கு இப்பாலத்தை பயன்படுத்த வழிவகை செய்ய முடியும்’’ என்றனர்.

இந்நிலையில், இந்த பாலத்தை சீரமைப்பது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, மாநில நெடுஞ்சாலைத் துறை திருச்சி மண்டல கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் கேசவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x