Published : 31 Dec 2021 09:36 AM
Last Updated : 31 Dec 2021 09:36 AM

சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் சரிபார்ப்பு: கரோனா விதிகளை கடைபிடிக்காதோருக்கு புதுச்சேரியில் அபராதம்

புதுச்சேரிக்குள் புத்தாண்டு கொண்டாட வரும் வெளி மாநில வாகனங்களை நிறுத்தி, கரோனா தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்கின்றனர். இடம்: கோரிமேடு. படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

தென்மாநிலங்களில் புதுவை யில் மட்டுமே புத்தாண்டு கொண்டாட அரசு அனுமதித்துள்ளது.

புதுவையில் ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியுள்ளதால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாளை இரவு (வெள்ளிக்கிழமை) 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என தடை விதித்தும், புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை சரிபார்க்க வேண்டும் எனக்கூறியும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதியளித்துள்ளனர்.

டிசம்பர் 15-ம் தேதிக்கு மேல் புதுவையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதுவையில் உள்ள நட்சத்திர விடுதி முதல் சாதாரண விடுதிகள் வரை அனைத்திலும் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே வந்த சுற்றுலா பயணிகளிடம் தடுப்பூசி சான்றிதழ் எப்படி சரிபார்க்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. புதுவை மாவட்ட நிர்வாகம் அறைகளில் தங்கியுள்ளவர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதித்தனர்.

புத்தாண்டு கொண்டாட் டத்துக்காக புதுவை கடற்கரை சாலை, ஹோட்டல்கள், ரிசார்ட்டுகளில் பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப்போது புத்தாண்டு கொண்டாட அனுமதி வழங்கியுள்ளதையடுத்து பணி களை விரைவுப் படுத்தியுள்ளனர்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து புதுவையின் பிரதான எல்லைகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, காலாப்பட்டு, முள்ளோடை பகுதிகளின் வழியாக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் வருவாய், சுகாதாரம், உள்ளாட்சி, காவல் துறையினர் தடுப்பூசி சான்றிதழை சரிபார்க்கின்றனர்.

கரோனா 2 தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அங்கேயே தடுப்பூசி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுவை நகர பகுதிகளில் நேற்று வலம் வந்த சுற்றுலா பயணிகளில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100 அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்தியவர்களிடம், ‘முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ என வலியுறுத்தினர்.

இதற்கிடையே, “மது விற்பனை கட்டுப்பாடுகளில் உயர்நீதிமன்ற உத்தரவு பேணப்படுகிறதா என்று அறிய 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்று கலால் துறை ஆணையர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x