Published : 27 Dec 2021 01:11 PM
Last Updated : 27 Dec 2021 01:11 PM

தங்கச்சிமடத்தில் குப்பை அள்ளும் வாகனம் பழுது: தள்ளிச் சென்று குப்பை சேகரிக்கும் பணியாளர்கள்

ராமேசுவரம்: ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் ஊராட்சியில் குப்பை அள்ளும் டிராக்டர் பழுதானதால் 10 நாட்களுக்கும் மேலாக வாகனத்தை தள்ளியபடியே தூய்மைப் பணியாளர்கள் குப்பை சேகரித்து வருகின்றனர்.

தங்கச்சிமடம் ஊராட்சிக்குட் பட்ட பகுதியில் 10 மீனவ கிராமங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு தினமும் 5 டன் வரை குப்பைகள் சேகரமாகின்றன. இவற்றை அகற்றும் பணியில் 8 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் குப்பை அள்ளும் டிராக்டர் வாகனம் உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பழுதடைந்துவிட்டது. இதை சரிசெய்ய ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் பழுதான டிராக்டர் வாகனத்தை தினமும் தூய்மைப் பணியாளர்கள் பல கி.மீ. தூரத்துக்கு தள்ளுவண்டியைப்போல் தள்ளிக் கொண்டே சென்று குப்பைகளை சேகரிக்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் கடும் மன உளைச்சல் அடைந் துள்ளனர். குப்பைகளை அகற்றும் பணியே மிகவும் கடினமானது, அதோடு டிராக்டர் வாகனத்தையும் தள்ளிக்கொண்டே செல்வதால் அவர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டிராக்டரை உடன டியாக சரிசெய்ய ஊராட்சி நிர் வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x