Published : 15 Mar 2016 08:05 AM
Last Updated : 15 Mar 2016 08:05 AM

11 லட்சம் மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளும் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று ஆரம்பம்: காப்பி அடிப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் பறக்கும் படைகள்

பள்ளி மாணவ, மாணவிகள், தனித் தேர்வர்கள் என 11 லட்சம் பேர் கலந்துகொள்ளும் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு இன்று (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது. தேர்வு மையங்களில் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க மாநிலம் முழுவதும் 7 ஆயிரம் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 15-ம் தேதி (இன்று) தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12,054 பள்ளி களில் இருந்து 10 லட்சத்து 72 ஆயிரத்து 223 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் மாணவர்கள் 5 லட்சத்து 14 ஆயிரத்து 798 பேர், மாணவிகள் 5 லட்சத்து 8 ஆயிரத்து 852 பேர் ஆவர். மாணவிகளை விட 5,946 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். இவர் களைத் தவிர 48,573 தனித்தேர் வர்களும் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் 574 பள்ளிகளில் இருந்து 53 ஆயிரத்து 168 மாணவ, மாணவிகள் 209 தேர்வு மையங் களில் தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் மாணவர்கள் 25,795 பேர். மாணவிகள் 27,373 பேர். புதுச்சேரியில் 48 தேர்வு மையங் களில் 298 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 8,346 பேர். மாண விகள் 8,695 பேர் ஆவர். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் 3 ஆயிரத்து 369 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

250 கைதிகள்

பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக் கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 250 கைதிகள் தேர்வு எழுத வுள்ளனர். தமிழ் வழியில் படித்து எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ் வழியில் படித்து 10-ம் வகுப்புத் தேர்வை எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 70 ஆயிரத்து 814 ஆகும்.

கற்றல் குறைபாட்டால் (டிஸ்லெக்சியா) பாதிக்கப்பட்ட மாணவர்கள், பார்வையற் றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறன் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுது பவர் நியமனம், மொழிப் பாட தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு, கூடுதல் ஒரு மணி நேரம்) 3,679 தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டுள் ளது. அவர்களுக்கு தேர்வுக் கூடங்கள் தரைத்தளத்திலேயே அமைக்கப்படும்.

பறக்கும் படைகள்

அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடு வதற்காக சுமார் 7,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வு நேரங்களில் தேர்வர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட் டால் கடுங்குற்றமாக கருதப்படும். ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந் தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயற்சி செய்தால் பள்ளித் தேர்வு மையத்தை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய் யப்படும்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.

செல்போனுக்கு தடை

தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வருவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள் ளது. இந்த உத்தரவை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் உள்ளிட்ட இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப் பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது.

தேர்வு நேரம்

தேர்வு தினமும் காலை 9.15 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணிக்கு முடிவடையும். 9.15 முதல் 9.25 வரை 10 நிமிடங்கள் கேள்வித்தாளை படித்துப் பார்க் கவும் 9.25 முதல் 9.30 வரை 5 நிமிடம் மாணவர்கள் தாங்கள் குறிப்பிடும் விவரங்களை சரிபார்க்கவும் நேரம் அளிக்கப்படும். 9.30 மணி முதல் விடையளிக்க தொடங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x