Published : 22 Dec 2021 09:45 AM
Last Updated : 22 Dec 2021 09:45 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டிகள்: குறைவான போட்டிகள் நடத்துவதாக கூறி போராட்டம்

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு திடலில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள். படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

புதுச்சேரி அரசு சமூக நலத்துறையின் சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் உப்பளம் இந்திராகாந்தி விளை யாட்டு அரங்கில் நேற்று நடை பெற்றது. சமூக நலத்துறை அமைச் சர் தேனீ. ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்எல்ஏ ஆகியோர் போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நலத்துறை செயலர் உதயகுமார், இயக்குநர் பத்மாவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பார்வையற்றோர், செவித்திறன் குறையுடையோர், கை, கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தனித்தனியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 3 சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் 100-க்கும் மேற்பட்ட மாற் றுத்திறனாளிகள் தங்களை பதிவு செய்து கொண்டு உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

இதனிடையே 15 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்ததிட்டமிட்டிருந்த நிலையில் குறை வான போட்டிகளே நடத்துவதாக கூறி, மாற்றுத்திறனாளிகள் சமூகநலத்துறை அதிகாரிகளை முற்று கையிட்டனர். அதிகாரிகள் முறை யான பதில் அளிக்கவில்லை. இதனால் ஆவேசமடைந்த மாற்றுத்திறனாளி பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சில மணி நேரத்திற்கு பின்னர் போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து போட்டிகள் வழக்கம்போல் நடைபெற்றது.

இதுதொடர்பாக மாற்றுத்திற னாளிகள் தரப்பில் கூறும்போது, ‘‘15 வகையான போட்டிகள் நடத்ததிட்டமிட்டனர். ஆனால் கேரம்,செஸ், விநாடி வினா, பாட்டுப் போட்டி போன்ற அறிவுப்பூர்வமான போட்டிகள் நடத்தவில்லை. பெயருக்கென்று குறைவான போட்டிகளை நடத்துகின்றனர்.

இன்று ஒருநாள் தான் நாங் கள் அனைவரும் ஒன்றாக மகிழ்ச்சியுடன் இருப்போம். ஆனால் அதிகாரிகள் குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு பல போட்டிகளை நடத்துவதில்லை. இதுபற்றி கேட்டால் முறையாக பதில் கூறுவ தில்லை.

அரசின் மீது தவறில்லை. அதிகாரிகள் மீது தான் தவறு உள்ளது’’ என்று தெரிவித்தனர்.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு நாளை (டிச. 23)நடக்கும் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினவிழாவில் பரிசு கள் வழங்கப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x