Last Updated : 08 Mar, 2016 08:16 AM

 

Published : 08 Mar 2016 08:16 AM
Last Updated : 08 Mar 2016 08:16 AM

2011 சட்டப்பேரவைத் தேர்தலில் விதி மீறல் தொடர்பாக 64 ஆயிரம் வழக்குகள் பதிவு: 250 பேருக்கு மட்டுமே தண்டனை

கடந்த 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக 64 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 250 பேருக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு அவற்றை தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல் படுத்தி வருகிறது. விதிமுறைகளை மீறி சுவர் விளம்பரம் செய்தது, போஸ் டர் ஒட்டியது, பேனர் கட்டியது, பணப் பட்டுவாடா, பிரச்சாரத்தில் விதிமீறல், வேட்புமனு தாக்கலின் போது அதிக கூட்டத்தினர் வருவது என பல வகையான விதி மீறல் புகார்களின் மீது காவல் நிலையங் களில் வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றன. அப்படி, கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் அரசியல் கட்சிகள், கட்சியினர் மீது மொத்தம் 64,250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தேர்தல் முடிந்த பின்னர் இந்த வழக்குகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் முடக்கி வைப்பதை போலீ ஸார் பல காலமாக பின்பற்றி வருகின்ற னர். இந்த வழக்குகளை அரசுதான் நடத்த வேண்டும். ஆனால், ஆட்சி அமைக்கும் கட்சியினர் மீதும் அதிக வழக்கு இருக்கும் என்பதால், வழக்குகளை நடத்துவதில் எந்த அரசும் ஆர்வம் காட்டுவதில்லை.

கடந்த தேர்தலில் பதிவு செய்யப் பட்ட 62 ஆயிரம் வழக்குகளில், சுமார் 45 ஆயிரம் வழக்குகள் விளம்பரங்கள், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பானவை. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தாக சுமார் 2,500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விதி மீறல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக கடந்த சில ஆண்டுகளில் சுமார் 250 பேருக்கு மட்டுமே தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

தேர்தலின்போது ஓட்டுக்கு பணம், பரிசுப் பொருட்கள், இலவசங்கள் கொடுப்பதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடத்தப்படும். 2011 சட்டப்பேரவை தேர்தல், 2014 மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் முறையான ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யட்டது.

அதில் பலர் ஆவணங்களைக் காட்டி பணத்தை திரும்ப பெற்றுச் சென்றனர். ஆனால் ரூ.48 கோடிக்கு உரிமை கொண்டாடி இன்று வரை யாரும் வராததால் அது அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறும்போது, ‘‘தேர்தல் விதிகளை பின்பற்றாவிட்டால், அவர்களின் குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை வழங்கப்படுகிறது. குறிப்பாக இணையதள விதிமீறல்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 188-வது விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x