Last Updated : 01 Dec, 2021 06:38 AM

 

Published : 01 Dec 2021 06:38 AM
Last Updated : 01 Dec 2021 06:38 AM

நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததால் பெரியாறு அணைக்கு 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதைத் தொடர்ந்து, 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 5,855 கனஅடி நீர் வருகிறது. கேரளப் பகுதிக்கு 1 முதல் 9 மதகுகளில் தலா 30 செ.மீ. உயர்த்தப்பட்டு 4,284 கனஅடி நீரும், தமிழகப் பகுதிக்கு 4 ராட்சத குழாய்கள் மூலம் 2,300 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் பொதுப்பணித் துறை மதுரை மண்டல முதன்மைப் பொறியாளர் கிருஷ்ணன் தலைமையில் பெரியாறு வைகை பாசனக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் சுகுமார், பெரியாறு அணை செயற்பொறியாளர் ஷாம் இர்வின், உதவிபொறியாளர்கள் ராஜகோபால், குமார், பரதன் உள்ளிட்ட அதிகாரிகள் அணைப் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

பின்னர் அவர்கள் கூறும்போது, அணைக்கு வரும் நீரின் அளவைப் பொறுத்து, நீர் வெளியேற்றத்தை அவ்வப்போது மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 4-வது முறையாக பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் 5 மாவட்ட விவசாயிகள் சங்கத்தினர் கூடலூர் அருகே லோயர்கேம்ப்பில் உள்ள மணிமண்டபத்தில் பென்னிகுவிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கம்பம், உத்தமபாளையம், கூடலூர் விவசாயிகளுக்கு இனிப்பு வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x