Published : 12 Nov 2021 03:14 AM
Last Updated : 12 Nov 2021 03:14 AM

தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்; ரூ.154 கோடி வருவாய்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்

சென்னை

தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் மூலம், ரூ.154.48 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரி வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

தீபாவளியையொட்டி இயக்கப்பட்ட 14,432 பேருந்துகளில் 7 லட்சத்து 4 ஆயிரத்து 49 பயணிகள்பயணம் செய்தனர். தீபாவளி முடிந்த பிறகு, சென்னை உட்பட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட்ட14,412 பேருந்துகளில் 7,20,600 பயணிகள் பயணம் செய்தனர். தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 7 நாட்களில் மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகளில் 14,24,649 பேர் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.8 கோடியே 37 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு, நவ.1 முதல் 4 வரை தமிழகம் முழுவதும் சராசரியாக நாளொன்றுக்கு 17,694தினசரி பேருந்துகளுடன், 966 சிறப்புப் பேருந்துகளில் 4.33 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.80.12 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. கடந்தஆண்டை விட ரூ.12 கோடி வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

நவ.5 முதல் 8 வரை தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சராசரியாக நாளொன்றுக்கு 15,903 தினசரி பேருந்துகளுடன், 519 சிறப்புப்பேருந்துகளில் 3.93 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். இதன் வாயிலாக ரூ.74.36 கோடி வருவாய்கிடைத்துள்ளது. கடந்த ஆண்டை விட இது ரூ.7.39 கோடி கூடுதல்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x