Published : 22 Jun 2014 10:39 AM
Last Updated : 22 Jun 2014 10:39 AM

சுடுகாட்டில் ஆட்டோக்களை நிறுத்தி போராட்டம்: இடம் ஒதுக்காத ஆரணி நகராட்சிக்கு கண்டனம்

ஆரணியில் ஆட்டோக்களை நிறுத்து வதற்கு இடம் ஒதுக்காத நகராட் சியை கண்டித்து, சுடுகாட்டில் ஆட்டோக்களை நிறுத்தி ஓட்டுநர் கள் போராட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலை யத்தில், நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் ஆட்டோ நிறுத்தும் இடம் செயல்பட்டு வந்தது. அந்த இடத்தில், இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு பயன்படுத்த ஆரணி நகராட்சி முடிவு செய்தது. இதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்ப்பு தெரி வித்தனர். சென்னை உயர்நீதிமன் றத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஆட்டோ ஓட்டு நர்களுக்கு, சாதகமாக தீர்ப்பு கிடைக்கவில்லை. ஆட்டோ டிரை வர்கள், 24 மணி நேரத்தில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று ஆரணி நகராட்சிக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளர் மணி தலைமை யிலான போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நகராட் சிக்கு சொந்தமான இடம் வெள்ளிக் கிழமை மீட்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம், மாற்று இடம் வழங்கப்படும் என்று போலீ ஸார் கூறியதால், அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில், இடம் ஒதுக்காத நகராட்சியை கண்டித்து, கமண்டல நாக நதியோரம் உள்ள சுடுகாட்டில் சுமார் 50 ஆட்டோக்கள், சனிக் கிழமை நிறுத்தப்பட்டன. அங்கு, அண்ணா ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என்று அதிமுக சார்ந்த தொழிற்சங்க பலகை வைக்கப்பட்டது.

ஆட்டோ நிறுத்தும் இடம் ஒதுக்காத வரை போராட்டம் தொடரும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x