Published : 15 Mar 2016 08:39 AM
Last Updated : 15 Mar 2016 08:39 AM

உடுமலைப்பேட்டை கொலை சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

உடுமலைப்பேட்டை படுகொலை சம்பவத்துக்கு பல்வேறு தலைவர் கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

கொலை மிரட்டல் குறித்து புகார் அளித்தும் காவல்துறை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக் கையும் எடுக்காததால் சங்கர் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக அரசும், காவல் துறையும்தான் பொறுப்பேற்க வேண்டும். காதல் திருமணங்களை சகித்துக்கொள்ளாத ஆதிக்க சமூகத்தினர் வன்முறை மூலம் பாடம் கற்பிக்க முயல்வது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

கி.வீரமணி

வடமாநிலங்களில் ‘லவ் ஜிகாத்’ என்று சொல்லி மதம் மாறி திருமணம் செய்து கொள்பவர் களுக்கு எதிராக பாஜக ஆட்சியி ன் துணையோடு சங்பரிவார்கள் வன்முறையில் ஈடுபடுகின்றன. தமிழகத்தில் ஜாதியை முன்னி றுத்தி அரசியல் நடத்த விரும்பு பவர்கள் பிரச்சாரத்தால், செயல் பாட்டால் ஜாதி மறுப்புத் திரு மணங்களைச் செய்துகொள்வோர் உயிருக்கு உலை வைக்கப்படு கிறது. இது கடும் கண்டனத்துக் குரியது.

ஜி.ராமகிருஷ்ணன்

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் சங்கர் என்ற இளைஞர் ஜாதி ஆதிக்க சக்திகளால் படுகொலை செய் யப்பட்டிருப்பதை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. தமி ழகத்தில் ஜாதி ஆதிக்க வெறி தலைவிரித்தாடுகிறது. இச்சம் பவத்தில் தொடர்புடைய குற்ற வாளிகளை உடனடியாக கைது செய்து, இறந்த சங்கரின் குடும்பத் துக்கு உரிய நிவாரணமும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்.

திருமாவளவன்

கடந்த 5 ஆண்டுகளில் தென் மாவட்டங்களில் 600-க்கும் மேற் பட்ட ஜாதியக் கொலைகள் நிகழ்ந் துள்ளன. இதில் 70 சதவீதத்துக் கும் அதிகமாக தலித்கள் கொல் லப்பட்டுள்ளனர். ஜாதி மோதல் கொலைகள் மற்றும் கவுரவக் கொலைகளை தடுக்க தமிழகத்தில் மாறி, மாறி ஆட்சி செய்து வரும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்ப தில்லை.

இரா. முத்தரசன்

சமூக நீதிக்காக பெரியார், அண்ணா, ஜீவா போன்றோர் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். ஆனாலும், தமிழ்நாட் டில் ஜாதியப் படுகொலைகள் தொடர்ந்து நடைபெறுவது மிகுந்த அவமானம். இக்கொலைகளை தடுத்து நிறுத்தாமல் அரசு வேடிக்கை பார்க்கிறது. தடுக்கா விட்டால் சமூகத்தில் பதற்றமான சூழல் உருவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x