Published : 29 Mar 2016 11:45 AM
Last Updated : 29 Mar 2016 11:45 AM

தமாகாவின் தேர்தல் சின்னம் தென்னந்தோப்பு: வாசன் அறிவிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 4 தென்னை மரங்கள் கொண்ட 'தென்னந்தோப்பு' தேர்தல் சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் கட்சியின் புதிய சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், ஏப்ரல் 2-ம் தேதி முதல் தங்கள் கட்சியின் தேர்தல் சின்னத்தை விளம்பரப்படுத்த பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகக் கூறினார். இருப்பினும் தமாகா கட்சிக் கொடியில் தென்னந்தோப்பு சின்னம் இடம்பெறாது என்றார்.

சைக்கிள் சின்னம் பறிபோனது ஏன்?

கடந்த 1996-ல் வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனாரால் தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தொடங்கப்பட்டது. 2002-ல் இக்கட்சியினர் காங்கிரஸில் இணைந்தபோது, தமாகா முறையாக கலைக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸுக்கு ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து, கடந்த 2014, நவம்பரில் அக்கட்சியை விட்டு வெளியேறிய வாசன், மீண்டும் தமாகா.வை தொடங்கினார்.

தமாகா முறையாக கலைக்கப்படாமல் இருந்தமையால் அக்கட்சியின் பெயர் வாசனுக்கு மீண்டும் கிடைத்தது. இதேவகையில் தனது சைக்கிள் சின்னத்தை பெறும் முயற்சியில் தமாகா இறங்கியது. இதற்காக அக்கட்சி மத்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி வந்தது.

ஆனால், சைக்கிள் சின்னத்தை பிராந்தியக் கட்சிகளான உ.பி.யின் சமாஜ்வாதி கட்சி, ஆந்திராவின் தெலுங்கு தேசம் ஆகியவை பயன்படுத்தி வருவதாக குறிப்பிட்டு ஆணையம் மறுப்பு தெரிவித்தது.

இது தொடர்பாக கடைசியாக 2013-ல் திருத்தம் செய்யப்பட்ட தேர்தல் சட்டத்தை ஆணையம் சுட்டிக்காட்டிய தேர்தல் ஆணையம், ஒரு கட்சி பயன்படுத்தி வரும் சின்னத்தை வேறு கட்சி பயன்படுத்த அனுமதிப்பது இல்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில், வேறு வழியின்றி சுயேச்சைகளை போல தமாகாவும் தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் இருந்து ஒரு சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x