பெண் குழந்தைகளை பாதுகாக்க சிலம்பம் கற்றுத்தரவேண்டும்:  தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்

பெண் குழந்தைகளை பாதுகாக்க சிலம்பம் கற்றுத்தரவேண்டும்:  தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தல்
Updated on
2 min read

பெண் குழந்தைகளை பாதுகாக்க சிலம்பம் கற்றுத்தரவேண்டும் என மதுரையில் சிலம்பம் பரிசளிப்பில் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பேசினார்.

மதுரையில் தீனதயாள் சேவை மையம், உலக கலை, விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், தென் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. முன்னதாக போட்டியை ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி. ராஜசேகர், சிலம்பாட்டக்கழக மாவட்ட தலைவர் பெரீஸ் மகேந்திரவேல் தொடங்கி வைத்ததனர். பரிசளிப்பு விழாவில் தொலுங்கானா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் பங்கேற்று சிறந்த வீரர்களுக்கு பரிசு வழங்கினார்.

விழாவில் அவர் பேசியது:

கரோனா தொற்றுக் காலம் முடிவுக்கு வரும் சூழலில் நான் பங்கேற்கும் 2வது நிகழ்ச்சி என்பதில் மகிழ்ச்சி. முதல் நிகழ்ச்சி தூத்துக்குடி. மதுரையில் தான் ஆரம்ப கல்வியை தொடங்கினேன். அப்போது எனது தந்தை பெருமாள் கோயில் தெருவில் டுட்டோரியல் கல்லூரி நடத்தினார். மதுரைக்கு எப்போது வந்தாலும், மீனாட்சியை தரிசிக்காமல் சென்றதில்லை. நேற்று வாய்ப்பில்லை. தற்போது புதுச்சேரியில் கோவில்கள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அதிக கோயில் களை திறக்க நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கலாச்சாரத்துடன் கலந்தது சிலம்பு. எனக்கு முன்பாக பேசிய நீதிபதி நான் கூலாக இருப்பேன் என, தெரி வித்தார். அவ்வாறு இருந்ததால் தான் 20 ஆண்டுக்கு மேலாக அரசியலில் நீடிக்க முடிந்தது. புரட்சி தலை வரின் படங்களில் அவர் சிலம்பம் சுற்றுவதை கண்டு பார்வையாளர்கள் விசில் அடிப்பர். சிறுவயதில் அவர் படம் பார்த்தபோது, சிலம்பம் பற்றி தெரிந்து கொண் டேன். மருத்துவராக நான் வரவேற்கும் விளையாட்டு சிலம்பம். இது மனநலம் காத்து, ஒற்றுமையை ஏற் படுத்துகிறது.

உலக மனநல நாளில் இந்த விழாவில் பங்கேற்பது மேலும் மகிழ்ச்சி. கத்தி, துப்பாக்கி போன்ற ஆயுதங்களைவிட, வல்லவனுக்கு கம்பு சிறந்த ஆயுதம். ஒரு காலத்தில் சிலம்பம் சுற்றி தான் காடு களில் மிருங்களை துரத்தினர். குறிப்பாக பெண் குழந்தைகளை பாதுகாக்க, சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை கற்று கொடுக்கவேண்டும். தமிழகம், புதுச்சேரி, தெலுங்கானாவில் நான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் இதை வலியுறுத்துகிறேன். பள்ளி, கல்லூரியில் தற்காப்பு கலையில் சிலம்பத்தை ஒருபாடமாக சேர்க்கவேண்டும், என்றார்.

நிகழ்ச்சியில் நீதிபதி விஆர் .சுவாமிநாதன் பேசும்போது, ‘‘ இதில் பங்கேற்றது சந்தோஷம். நான் வழக்கறிஞராக பணியாற்றியபோது, ஆளுநரின் தந்தை எனது கட்சிக்காரராக இருந்தார். அவருக்கு பல்வேறு வழக்குகளை நடத்தியுள்ளேன். எனக்கு திருமணம் முடிந்து, எனது மனைவியின் முதல் பிரசவம் பார்த்த மருத்துவர்களில் ஆளுநர் தமிழிசையும் ஒருவர் என, தெரிந்துகொண்டேன். அவரின் இந்த வளர்ச்சிக்கு காரணம் எதையும் கூலாக எதிர்கொள்ள கூடியவர். அதுவே அவரை இந்தளவுக்கு உயர்த்தியது,’’ என்றார்.

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மருத்துவர் நாகேந்திரன் முன்னி லை வகித்தார். பாஜக மாநில செயலர் சீனிவாசன், மாநகர் மாவட்ட தலைவர் கேகே. சீனிவாசன்,புறநகர் மாவட்ட செயலர் மகா சுசீந்திரன், துணைத்தலைவர் ஹரிகரன், மாநில துணைத்தலைவர் மகாலட்சுமி, முன் னாள் மாவட்ட தலைவர் சசிராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிலம்பம் மாஸ்டர் முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in