Published : 30 Mar 2016 10:23 AM
Last Updated : 30 Mar 2016 10:23 AM

நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் மீனவர்களுக்கான முதல் வானொலி பாம்பனில் விரைவில் தொடக்கம்

இந்தியாவில் மீனவர்களுக்கான முதல் சமுதாய வானொலி பாம்பனில் தனது ஒலிபரப்பை விரைவில் தொடங்க உள்ளது.

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள், படகுகளை மீட்பது, மீனவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பது எனப் பல்வேறு சேவைகளை ராமேசுவரம் பகுதிகளில் 2014-ம் ஆண்டு முதல் ‘நேசக்கரங்கள்’ என்கிற அறக்கட்டளை செய்து வருகிறது. இதன் மூலம் ராம நாதபுரம் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

இந் நிலையில், நேசக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் இந்தியா விலேயே முதல் முறையாக மீனவர் களுக்கான பிரத்யேக சமுதாய வானொலி நிலையம் ‘கடல் ஓசை’ என்ற பெயரில் பாம்பனில் அமைக் கப்பட்டுள்ளது.

இது குறித்து நேசக்கரங்கள் அறக் கட்டளையின் அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, முகை தீன் அப்துல் காதர் ஆகியோர் ராமேசு வரத்தில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ராமேசுவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த இளைஞர் களையே வானொலி வல்லுநர் களாகப் பயிற்சி அளித்து ‘கடல் ஓசை’ சமுதாய வானொலி 90.4 என்ற அலைவரிசையில் இயங்க உள்ளது. ‘கடல் ஓசை’ இந்தியா விலேயே முதன் முறையாக மீனவர் களுக்கென்று பிரத்யேகமாக ஒலி பரப்பாக உள்ள சமுதாய வானொலி ஆகும்.

விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் ஆயிரக்கணக்கான மீன வர்களுக்கு சுனாமி, புயல், கடல் சீற்றம் போன்ற ஆபத்தான காலங் களில் மீனவர்கள் செய்ய வேண்டி யது என்ன?, கடலில் அபாயகரமான பகுதிகள் எவை? அதிக மீன்கள் கிடைக்கும் இடங்கள் ஆகிய தகவல்கள் ‘கடல் ஓசை’ சமுதாய வானொலியில் ஒலிபரப்பப்படும்.

மீனவர்களுக்கான மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்கள், மீனவக் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப் புணர்வு, மீனவப் பெண்களுக்கான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி, சுகாதாரமான முறையில் மீன்களை கையாள்வது மற்றும் ஏற்றுமதி குறித்த தொழில்நுட்ப உரைகளும் கடல் ஓசையில் இடம் பெறும்.

மன்னார் வளைகுடா, பாக். நீரிணை ஆகிய கடல் பகுதியில் வசிக்கும் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்துதல், கடல் சூழலியல் மண்டலத்தை பாதிக் காத மீன்பிடி முறைகள் குறித்த நிகழ்ச்சிகளையும் கடல் ஓசை வானொலியில் கேட்கலாம். ‘கடல் ஓசை’ இணையதளத்தில் நேரலை களாக உலகெங்கும் கேட்பதற்கு வழிவகை செய்யப்படும் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x