Last Updated : 12 Mar, 2016 09:28 AM

 

Published : 12 Mar 2016 09:28 AM
Last Updated : 12 Mar 2016 09:28 AM

மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தேர்தல் களத்தில் இணையுமா? - தலைவர்கள் பதில்

மக்கள் நலக் கூட்டணி தேமுதிக இணைய சாத்தியமுள்ளதா என்பது தொடர்பாக ம.ந. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர் கள் பதில் அளித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடு வதாக அறிவித்துள்ளது. தேமுதிக வின் கொள்கையோடும், கருத் தோடும் ஒற்றுமையுடையவர்கள் விஜயகாந்த் தலைமையை ஏற்று வரலாம் என்று பிரேமலதா விஜய காந்த் கூறியுள்ளார். மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, வெளிப்படையான நிர்வாகம் போன்ற கொள்கைகளில் எங்களுக்கும் தேமுதிகவுக்கும் உடன்பாடு உள்ளது என்று ம.ந. கூட்டணியினர் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், ஒத்த கருத் துள்ளவர்கள் தேமுதிக தலை மையை ஏற்று வந்தால் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்று பிரேமலதா கூறியுள்ளது, ம.ந.கூட் டணிக்கு விடுக்கப்பட்ட அழைப் பாகவே கருதப்படுகிறது.

மக்கள் நலக் கூட்டணி தேமுதிக இணைவது சாத்தியமா என்று மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களிடம் கேட்ட போது, அவர்கள் அளித்த பதில்கள் பின்வருமாறு:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

தேமுதிகவை பற்றி விஜயகாந்தின் கண்ணியத்துக்கு களங்கம் விளைவிக்கும் வண்ணம் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. அந்த வதந்திகளுக்கெல்லாம் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தேமுதிக தனித்துப் போட்டி என்று அறிவித்துள்ளதை மதிமுக பொதுச் செயலாளர் என்ற முறையிலும் ம.ந. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையிலும் வரவேற்கிறேன். பிரேமலதாவின் கூட்டணி அழைப்புப் பற்றி இப்போது ஏதும் பதில் சொல்ல முடியாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக ஆகிய 5 கட்சிகளைத் தவிர மீதமுள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்றும் அவற்றுக்கு மாற்றாக இருப்போம் என்றும் நாங்கள் கூறியிருந்தோம். எங்களுடைய கொள்கைகளை விஜயகாந்த் ஏற்கெனவே பாராட்டி யுள்ளார். இப்போது, அவர் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளதன் மூலம், நாங்கள் விடுத்த அழைப்பு இன்னமும் அவரது பரிசீலனையில் உள்ளது என்றே கருதுகிறோம். அதனை அவர் பரிசீலனை செய்ய வேண்டும். பிரேமலதா அழைப்பு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை. ம.ந. கூட்டணியின் ஆலோசனைக்குப் பிறகே முடிவெடுப்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச பொது செயல் திட்டம் வரவேற்கத் தக்க அளவில் உள்ளது என்று விஜயகாந்த் கூறினார். அதனடிப்படையில் நாங்கள் அவரை சில மாதங்களுக்கு முன்பு சந்தித்து கூட்டணிக்கு அழைப்புவிடுத்தோம். பரிசீலிப்பதாக விஜயகாந்த் கூறி னார். ஊழல் ஒழிப்பு, வெளிப்படை யான அரசு நிர்வாகம் என்ற கொள் கையைத்தான் தேமுதிக முன் வைக் கிறது. ம.ந. கூட்டணியும் அதே கொள்கையைத்தான் முன் வைக் கிறது. எனவே, பிரேமலதா விஜய காந்த் விடுத்துள்ள அழைப்பின் மூலம், தேமுதிக, ம.ந. கூட்டணி இணைய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக விஜயகாந்த் எங்களுடன் பேசுவார் என்று நினைக்கிறோம். நாங்களும் ஆலோசனை செய்த பின்னர் பேச திட்டமிட்டுள்ளோம்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்:

ம.ந.கூட்டணியை தொடங்கி நீண்ட தூரம் பயணப்பட்டுவிட்டோம். அதிமுக, திமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி பலமாக உள்ளது. அதனை மேலும் பலப் படுத்த நாங்கள் எண்ணுகிறோம். இந்த நிலையில் விஜயகாந்த் புதிதாக ஒரு அணியை உருவாக்குவதற்கு பதிலாக ம.ந.கூட்டணியில் இணைந் தால், திமுக, அதிமுகவை எளிதில் வீழ்த்தலாம். புதியை அணியை உருவாக்கி அதனை பலப்படுதுவது சாத்தியமில்லாதது. எனவே, அவர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜகவுடனான நிலைப்பாடு பற்றியும் அவர் தெளிவாக கூறவில்லை. அதை வைத்து தான் நாங்கள் முடிவெடுக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x