Published : 02 Oct 2021 06:39 AM
Last Updated : 02 Oct 2021 06:39 AM

மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு கவிதை போட்டி முடிவு அக்.6-ல் வெளியீடு: ‘இந்து தமிழ் திசை’ சார்பில் நடத்தப்பட்டது

சென்னை

மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விவரம் அக்.6-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்திய தேச விடுதலைக்காகவும், மக்கள் ஒற்றுமையோடும் சகோதரத்துவத்துடனும் சமத்துவமாக வாழ வேண்டுமென்கிற எண்ணத்தோடும் கவிதைகளை இயற்றிய மகாகவி பாரதியாரின் நினைவு நூற்றாண்டுதினம், கடந்த செப்.11 அன்று சிறப் பாகக் கொண்டாடப்பட்டது.

4,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

அதையொட்டி, அனைவரும் பங்கேற்கும் வகையில் கவிதைப் போட்டியை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடத்தியது. இப்போட்டியில், தமிழகம்மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 4,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இப்போட்டி விதிகளுக்கு உட்பட்டு மின்னஞ்சலிலும், அஞ்சலிலும் அனுப்பப்பட்ட கவிதைகளை நடுவர் குழு 2 கட்டங்களாகத் தேர்வு செய்தது. ஏராளமான பொதுமக்கள், ஆசிரியர்கள், பள்ளி - கல்லூரி மாணவ - மாணவிகளின் உற்சாகமான பங்கேற்பை நடுவர் குழு பெரிதும் பாராட்டியது. 2 கட்ட தேர்வுக்குப் பிறகும் போட்டிக்கு வந்த கவிதைகளில் சிறந்த கவிதையைத் தேர்வு செய்திட, 3-ம் கட்ட தேர்வும் நடைபெற்று வருகிறது.

எனவே, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரம் இன்று (அக்.2) தெரிவிக்கப்படுவதாக அறிவித்திருந்த நிலையில், இறுதி கட்டத் தேர்வுக்குப் பிறகு அக்.6-ம் தேதி ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெற்றி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும் என நடுவர் குழு தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x