Published : 02 Mar 2016 09:11 AM
Last Updated : 02 Mar 2016 09:11 AM

உள்ளாட்சி அமைப்பில் 50% இடஒதுக்கீட்டுக்கு நன்றி: அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டம்

உள்ளாட்சி அமைப்பில் மகளி ருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு நன்றி தெரி வித்து, அதிமுகவின் மகளிர் அணி சார்பில் காஞ்சிபுரம் நத்தப் பேட்டை பகுதியில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள் ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அதிமுகவின் மகளிர் அணியின் சார்பில் காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில், தமிழக அமைச்சர்கள் கோகுலஇந்திரா, வளர்மதி, வைத்தியலிங்கம், டி.கே.எம்.சின்னையா, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினர்கள் சோம சுந்தரம், வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். செயின்ட் ஜார்ஜ் கோட்டை வடிவி லான மின்விளக்கு அலங்காரம், பல்வேறு திட்டங்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைக் கும் புகைப்பட பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர்கள் அனைவரும், தேமுதிக மாநாடு மற்றும் திமுகவினரின் பேரணி பொதுக் கூட்டம் குறித்து பேசினார். எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை விஜயகாந்த் இழந்தது குறித்து சாடினர். ‘தனிநபர் ஒழுக்கம் இல்லாத கட்சியினர் மீது, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயங்கியதில்லை’ என பேச்சாளர் அருள் கூறினார். இரவு நெருங்கியதும் வீட்டுக்கு திரும்புவதற்காக, பொதுக்கூட்ட வளாகத்தில் இருந்த பெண் கள் வெளியேறினர். மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்கள், ‘கூட்டத்தில் இருந்து யாரும் வெளியேற வேண்டாம். அனை வரையும் பத்திரமாக பேருந்து களில் அனுப்பிவைக்கிறோம்’ என அவ்வப்போது வேண்டுகோளாக தெரிவித்தனர்.

காஞ்சிபுரம்-வாலாஜாபாத் சாலையில் ஏற்பட்ட போக்கு வரத்து நெரிசலால், வாகனங்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டன. காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி முத்தரசி தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x