Published : 16 Sep 2021 03:12 AM
Last Updated : 16 Sep 2021 03:12 AM

திண்டுக்கல்லில் அரசு பேருந்து ஜப்தி: பயணிகள் இறங்க மறுத்து வாக்குவாதம்

பேருந்து மோதி உயிரிழந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங் காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பேருந்து நேற்று ஜப்தி செய்யப்பட்டது. பாதியில் இறக்கிவிடுவதாகக் கூறி பய ணிகள் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் செம் மடைப்பட்டி அருகே 2016-ல் கருப்பாத்தாள் என்பவர் மீது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார். விபத்து இழப்பீடு கேட்டு இவரது கணவர் நல்லியப்பன் திண்டுக்கல் மாவட்ட சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி கோவை போக்குவரத்து கழகம் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.6,85,800 வழங்க 2018-ல் உத்தரவிட்டது. இழப்பீடு தொகையை தராத தால் நல்லியப்பன் நீதிமன்றத்தில் நிறை வேற்றல் மனுதாக்கல் செய்தார்.

இதில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படியும் இழப்பீடு வழங்காததால் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந் தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று பொன்னமராவதியில் இருந்து கோவைக்கு சென்ற அரசு பேருந்து திண்டுக்கல் பேருந்து நிலையம் வந்தபோது நீதிமன்ற ஊழியர்கள் பேருந்தை ஜப்தி செய்து நோட்டீஸ் ஒட்டினர்.

பயணிகள் இறங்க மறுத்து வாக்குவாதம் செய்தனர். பிறகு பயணிகளை வேறு அரசு பேருந்தில் ஏற்றிவிட்டு பஸ்ஸை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய் தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x