Published : 15 Sep 2021 03:11 AM
Last Updated : 15 Sep 2021 03:11 AM

இன்று மனுத்தாக்கல் தொடக்கம்; புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளர் யார்?- ரங்கசாமியுடன் பேசி பாஜக தலைமை இறுதி செய்யும்

புதுச்சேரி

புதுச்சேரி மாநிலங்களவை உறுப் பினர் வேட்பாளர் யார் என்பது வரும் 19-ல் முடிவாகிறது. முதல் வர் ரங்கசாமியுடன் பேசி பாஜக மேலிடம் இறுதி செய்யவுள்ளது. போட்டியின்றி தேர்வாகவே வாய்ப்புள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இன்று (செப். 15) வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. புதுச்சேரி சட்டப்பேரவை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை செயலாளர் அறையில் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம்.

இதுபற்றி சட்டப்பேரவை செயலர் முனிசாமி கூறுகையில், “மாநிலங்களவை எம்பிக்கு நாளை (இன்று) முதல் வரும் 22-ம் தேதி வரை காலை 11 மணியிலிருந்து மதியம் மதியம் 3 மணி வரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம். 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மனுத்தாக்கல் செய்ய முடியாது. அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி களைச் சேர்ந்தவர்கள் புதுச்சேரி சட்டமன்றத்தின் 3 எம்எல்ஏக்கள் பரிந்துரையோடு மனுத்தாக்கல் செய்யலாம். பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் 10 எம்எல்ஏக்கள் பரிந்துரையுடன் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். 23-ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ் பெற 27-ம் தேதி கடைசி நாளாகும்” என்று குறிப்பிட்டார்.

புதுச்சேரியில் மாநிலங்களவை எம்பி பதவியை ஆளும் கூட்டணியிலுள்ள என்ஆர் காங்கிரஸ்-பாஜக இரு கட்சிகளின் தலை மையும் குறி வைத்துள்ளன. சட்டப்பேரவையில் என்ஆர் காங்கிரஸூக்கு 10, பாஜகவுக்கு 6 எம்எல்ஏக்கள் உள்ளனர்.பாஜகவுக்கு 3 சுயேச்சை எம்எல் ஏக்கள் ஆதரவளித்துள்ளனர். இதனால் என்ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு அதிகவாக்குகள் உள்ளன. எதிர்க்கட் சியான திமுகவுக்கு 6, காங்கி ரஸ் 2, சுயேச்சைகள் 3 என மொத்தம் 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். முதல்வர் ரங்கசாமி இதுபற்றி வெளிப்படையாக தெரிவிக் கவில்லை.

இதுதொடர்பாக என்ஆர் காங்கிரஸ் - பாஜக வட்டாரங் களில் விசாரித்தபோது, “முதல்வர் ரங்கசாமியுடன் பாஜக மேலிடம்எம்பி பதவி தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கியுள் ளது. அதில் உறுதி செய்யப்படும்.

அடுத்தக்கட்டமாக ரங்கசாமியு டன் பேசி இறுதி செய்ய பாஜக மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா வரும் 19-ம் தேதி புதுச்சேரி வருகிறார். அன்றைய தினம் மாநிலங்களவை எம்பி யார் என்பது தெரியவரும். வரும் 20-ம் தேதி மனுத்தாக்கல் நடக்கும். புதுச்சேரி மாநிலங்களவை எம்பி போட்டியின்றி தேர்வாக வாய்ப் புள்ளது” என்று குறிப்பிடுகின்றனர்.

அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, “என்ஆர் காங்கிரஸ் - பாஜக தரப்பில் நிறுத் தப்படும் வேட்பாளரே எம்பியாக தேர்வாக முடியும். எதிரணியில் திமுகவில் 6 பேரும், காங்கிரஸில் 2 பேரும் மட்டுமே உள்ளனர்.

3 சுயேச்சை எம்எல்ஏக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதுஅவர்களின் சொந்த முடிவே ஆகும். இதனால் எதிர்க்கட்சிகள் போட்டியிட வாய்ப்பில்லை. ஒருவேளை தேர்தலில் போட்டி யிருந்தால் வரும் அக்டோபர் 4-ல் காலை 9 மணி முதல் மாலை 4 வரை சட்டப்பேரவை வளாகத்தில் அமைக்கப்படும் வாக்குச்சாவடியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் வாக்குகளை பதிவு செய்வார்கள். அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடத்தி வெற்றி பெற்றவரை அறிவிப்பார்கள்" என்று குறிப் பிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x