Published : 14 Sep 2021 03:13 AM
Last Updated : 14 Sep 2021 03:13 AM

32 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி நடைபெற்றது பேரவைக் கூட்டம்: சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதம்

சென்னை

32 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் ஜனநாயக முறைப்படி நடைபெற்றது என்று பேரவைத் தலைவர் அப்பாவு பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரின் நிறைவு நாளான நேற்று பேரவைத் தலைவர் அப்பாவு பேசிய தாவது:

16-வது தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்தமே 11, 12 தேதிகளிலும், ஜூன் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரையிலும் நடைபெற்றது. இரண்டாம் கூட்டத்தொடர் ஆக. 13-ம் தேதி தொடங்கிசெப்.13-ம் தேதி வரை நடைபெற்றுள்ளது. இக்கூட்டத்தொடர் ஆளுநர் உரையாற்றிய நாளையும் சேர்த்து மொத்தம் 28 நாட்கள் நடைபெற்றது. பேரவை அலுவல்கள் நடைபெற்ற மொத்த நேரம் 126 மணி 3 நிமிடங்கள். பேரவையில் ஜூன் 21-ம் தேதி ஆளுநர் உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் பதிலுரை 3 நாட்கள் நடைபெற்றது.

2021-22-ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டாக ஆக. 13-ம் தேதி தாக்கல்செய்யப்பட்டது. அதேபோல் முதன்முறையாக வேளாண் பட்ஜெட் 14-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கைகள் மீதான பொது விவாதமும், பதிலுரையும் 4 நாட்கள் நடைபெற்றது.

இதில் 2 நாட்கள் அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. மானியக் கோரிக்கை மீது 17 நாட்கள் விவாதம் நடைபெற்றது. 134 பேர் 43 மணி 36 நிமிடங்கள் உரையாற்றினார்கள். முதல்வர் தனது துறை தொடர்பாக பதில் அளித்த நேரம் 39 நிமிடம்.

அமைச்சர்கள் பதிலுரை ஆற்றிய மொத்த நேரம் 18 மணி59 நிமிடங்கள். 4,630 வெட்டுத் தீர்மானங்கள் வரப்பெற்றன. அவற்றில் 3,998 அனுமதிக்கப்பட்டன. அவையில் 1,093 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டன. 10 ஆண்டுகள் 32 நாட்களுக்குப் பிறகு 16-வது பேரவையின் முதல் வினாவாக முதல்வரின் வினா, பேரவையில் ஆக.31-ம் தேதி எடுத்துக்கொள்ளப்பட்டு பதில் அளிக்கப்பட்டது.

12 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. 349 கவன ஈர்ப்பு தீர்மானங்களை உறுப்பினர்கள் கொடுத்தனர். அதில் 81 அனுமதிக்கப்பட்டன. விலக்கு அளிக்கப்பட்டவை 7. அரசினர் சட்ட மசோதாக்கள் 30 வரப்பெற்றன. அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. மூன்று அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் 10 அறிக்கைகள் வாசித்தார்.

சட்டப் பேரவைக் கூட்டம் சிறப்பாக நடைபெற உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. முதல்வர் வழிகாட்டுதலின் பேரில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனநாயக முறைப்படி பேரவைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது.

இவ்வாறு பேரவைத் தலைவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x