Last Updated : 13 Mar, 2014 12:00 AM

 

Published : 13 Mar 2014 12:00 AM
Last Updated : 13 Mar 2014 12:00 AM

விருதுநகர் தொகுதியில் இந்தமுறை ஜாதி ஜெயிக்குமா?- கணக்கு போட்டு வேட்பாளர்களை நிறுத்தும் முக்கிய கட்சிகள்

விருதுநகர்தொகுதியில் மதிமுக சார்பில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த வைகோ நிற்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக, திமுக கட்சிகளும் சாதி கணக்குப் போட்டே வேட்பாளர்களை நிறுத்தி இருக்கின்றன.

விருதுநகர் (முன்பு சிவகாசி) தொகுதியில் அனைத்து கட்சி களுமே சாதிவாரியான ஓட்டுகளை குறிவைத்தே வேட்பாளர்களை நிறுத்தி வந்துள்ளன. 1967 தேர்தலில் எஸ்.டபிள்யூ.ஏ-வை சேர்ந்த ராமமூர்த்தி வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பி.ஏ.நாடார் தோல்விடையந்தார்.

1971 மற்றும் 1977-ல் காங் கிரஸ் கட்சியின் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார். அடுத்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் சௌந்தர்ராஜனிடம் தோற்றுப் போனார் ஜெயலட்சுமி. 1984 தேர்தலிலும் சிபிஐ வேட்பாளர் சீனிவாசனை வீழ்த்தினார் சௌந்தர்ராஜன். 1989 தேர்தலில் அதிமுக தரப்பில் காளிமுத்துவும் அவரது நண்பர் வை.கோபால்சாமி திமுக தரப்பிலும் மோதினார்கள். அப்போது கம்யூனிஸ்ட் கூட்டணி இருந்தும் காளிமுத்துவிடம் தோற்றார் வை.கோபால்சாமி.

1991 தேர்தலில் அதிமுக-வின் கோவிந்தராஜுலு சிபிஐ வேட் பாளரை வீழ்த்தினார். பதிலுக்கு 1996 ல் அதிமுக வேட்பாளர் சஞ்சய் ராமசாமியை வீழ்த்தினார் சிபிஐ வேட்பாளர் அழகிரிசாமி. 1998 தேர்தலில் அழகிரி சாமியையும் அடுத்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் ராமசாமியையும் தோற்கடித்து மதிமுக பொதுச் செயலாளர் வை.கோபால்சாமி வெற்றி பெற்றார்.

2004 தேர்தலில் அதிமுக வேட் பாளர் கண்ணனை தோற்கடித்து மதிமுக-வின் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் வெற்றிபெற்றார். தொடர்ந்து 3 தேர்தல்களில் வெற்றி வாகை சூடிய மதிமுக, 2009 தேர்தலில் தோற்றுப் போனது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட வைகோவை தோற்கடித்து காங்கி ரஸின் இறக்குமதி வேட்பா ளரான மாணிக் தாகூர் வெற்றி பெற்றார்.

இந்தத் தேர்தலில், கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளரும் முக்குலத்தோருமான டி.ராதா கிருஷ்ணனை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது அதிமுக. நாயுடு சமூகத்தினர் வைகோ-வை ஆதரிக்கும் பட்சத்தில் முக்குலத்

தோரின் வாக்கு வங்கியை வளைக்க முடியும் என்பது அதிமுக-வின் கணக்கு.

இதை அறிந்தே, தொகுதியில் கணிசமாக கலந்திருக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்த வர்த்தக சங்க பிரமுகர் ரத்தினவேலை இறக்கு

மதி செய்திருக்கிறது திமுக. இதிலும் குறுக்குச்சால் ஓட்டும் மாற்று அணிகள், ’’ரத்தினவேல் சிவகாசி நாடார். இவரை விருதுநகர் நாடார்கள் எப்படி ஆதரிப்பார்கள்?’’ என்று கொளுத்திப் போடுகின்றன. இவர்களின் சாதிவாரி கணக்கு இந்தத் தேர்தலில் எந்த அளவுக்கு சாத்தியம் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x