Published : 27 Feb 2016 10:17 AM
Last Updated : 27 Feb 2016 10:17 AM

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளில்: உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் 477

சென்னை மாநகராட்சி கூட்டங்களில் கடந்த 5 ஆண்டுகளில் உறுப் பினர்கள் சார்பில் மொத்தம் 477 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி கூட் டத்தில், மேயர் சைதை துரைசாமி கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் நவம்பர் 2011 முதல் ஜனவரி 2016 வரை 53 மன்றக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. அவை 146 மணி, 49 நிமிடங்கள் நடை பெற்றுள்ளன.

இதில் நான் 59 மணி 36 நிமிடங்கள் பேசியிருக்கிறேன். இந்த கூட்டங்களில் மொத்தம் 3 ஆயிரத்து 139 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மன்றக் கூட்டங்களில் 97 உறுப் பினர்கள் 477 கேள்விகளை எழுப் பியுள்ளனர். அதில் 116-வது வார்டு உறுப்பினர் பி.சீனிவாசன் (அதிமுக) அதிகப்படியாக 24 கேள்விகளை கேட்டுள்ளார்.

91-வது வார்டு உறுப்பினர் பி.வி.தமிழ்செல்வன் (காங்கிரஸ்), 1-வது வார்டு உறுப்பினர் எ.தமிழரசி (அதிமுக), 80வது வார்டு உறுப்பினர் ஜி.ஆர்.சீனி வாசன் (அதிமுக) ஆகியோர் தலா 22 கேள்விகளை கேட்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x