Last Updated : 20 Feb, 2016 08:34 AM

 

Published : 20 Feb 2016 08:34 AM
Last Updated : 20 Feb 2016 08:34 AM

அதிமுகவில் புதிய தமிழகம்?

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்ட டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி, திடீரென அதிமுக அணியை நோக்கி சாய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கடந்த 2011-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக அணியில் இடம்பெற்ற புதிய தமிழகம் கட்சி, 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன் பிறகு காலப்போக்கில் அதிமுகவுடன் பிணக்கு ஏற்பட்டதால் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக அணிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி மாறினார். அதேபோல் சட்டப்பேரவைக்கு வெளியேயும், உள்ளேயும் அதிமுகவை மிகக் கடுமையாக டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற கிருஷ்ணசாமி, ஆளுங்கட்சியினரின் இடையூறு இன்றி தனது கருத்துகளை முன்வைத்தார். கிருஷ்ணசாமியின் கருத்துக்கு எதிராகப் பேசத் தொடங்கிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவரை மூத்த அமைச்சர்களே தடுத்து அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்தினர்.

அதிமுக புதிய தமிழகம் இடையே இணக்கமான போக்கு ஏற்பட்டதற்கான அறிகுறி போல நேற்றைய காட்சிகள் இருந்தன. இதனால் வரும் பேரவைத் தேர்தலின்போது அதிமுக அணியில் புதிய தமிழகம் கட்சி மீண்டும் இடம்பெறக் கூடும் என்ற பேச்சும் பரவலாக எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x