Published : 11 Jun 2014 02:48 PM
Last Updated : 11 Jun 2014 02:48 PM

சிபிசிஐடி புதிய தலைமை அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள சிபிசிஐடி புதிய தலைமை அலுவலகத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில்: "சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் 50,577 சதுர அடி பரப்பளவில் நான்கு தளங்களுடன் 10 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலக கட்டடத்தை திறந்து வைத்தார்.

மேலும், தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் 11 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 144 குடியிருப்புகள்; 88 கோடியே 52 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 729 காவல்துறையினர் குடியிருப்புகள், 34 காவல் நிலைய கட்டடங்கள், 2 அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடங்கள், 13 இதர கட்டடங்கள்; 3 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 15 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குடியிருப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் அலுவலகம் ஆகியவற்றையும் திறந்து வைத்தார்.

மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாப்பது, சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிப்பது, குற்றங்கள் நிகழாமல் தடுப்பது, குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தக்க தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பல்வேறு முக்கியப் பணிகளை காவல் துறை ஆற்றி வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த காவல் துறையினரின் பணிகளை மேலும் சிறப்பாக ஆற்றும் வகையில், புதிய காவல் நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளைக் கட்டுதல், காவல்துறை அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நான்கு தளங்களுடன் 10 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில், சென்னை பெருநகர பிரிவு 1 மற்றும் 2, ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு 1 மற்றும் 2, கள்ளநோட்டு தடுப்புப் பிரிவு, காவல் ஆராய்ச்சி மையம், தலைமையகப் பிரிவு, கட்டுப்பாட்டு அறை, குற்ற புலனாய்வுத் துறை வாகனப் பிரிவு ஆகியவை தரைத் தளத்திலும்; கூடுதல் காவல்துறை இயக்குநர், காவல்துறை தலைவர், காவல்துறை துணைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், ஒலி ஒளி தொழில்நுட்பப் பிரிவு,கணினி வழி குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவை முதல் தளத்திலும்; அமைச்சுப் பணியாளர் கணக்கு மற்றும் நிர்வாகம், பதிவறை, கிடங்குப் பிரிவு, கணினி அறை, நூலகம், காவலர் திறனாய்வு வகுப்பறை, விபச்சார நிகழ்வு தடுப்புப் பிரிவு ஆகியவை இரண்டாம் தளத்திலும்; சிறப்பு புலனாய்வு பிரிவின் கூடுதல் காவல் துறை இயக்குநர், காவல்துறை தலைவர், காவல்துறை துணைத் தலைவர், காவல் கண்காணிப்பாளர், கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள், கலந்தாய்வுக் கூடம், உணவறை ஆகியவை மூன்றாம் தளத்திலும்; இருப்புப் பாதை பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநர், காவல்துறை தலைவர், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகங்கள், கிடங்குப் பிரிவு, சிறப்பு புலனாய்வுப் பிரிவு - புலன் விசாரணை பிரிவு அமைச்சுப் பணியாளர் அலுவலகம், கூட்டுக் கொள்ளைத் தடுப்புப் பிரிவு, சட்ட ஆலோசகர் அறை, கட்டுப்பாட்டு அறை ஆகியவை நான்காம் தளத்திலும் செயல்படும்.

மேலும், 13 பேர் செல்லக்கூடிய மூன்று மின்தூக்கிகள், அவசர வழி படிக்கட்டுக்கள், இடிதாங்கி, வானூர்தி எச்சரிக்கை விளக்கு, தீ தடுப்பு சாதனங்கள், தீ எச்சரிக்கை ஒலிப்பான், இன்டர்காம் வசதி, தெரு விளக்குடன் கூடிய உள்ளமைப்பு சாலைகள், புல் தரைகள், குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, ஊடக அறை, பொதுமக்கள் அறை, சோதனை அறை, மழைநீர் சேகரிப்பு ஆகிய வசதிகள் இப்புதிய குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து தேசிய அளவில் சமீபத்தில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகள், துப்பாக்கிச் சுடுதல், அதிரடிப் படைத்திறன் மற்றும் குற்றப் புலனாய்வு, வெடிபொருள் கண்டுபிடித்தல் முதலிய பணித்திறன் போட்டிகளில் காவல் துறையினர் பெற்ற பதக்கங்களையும், கோப்பைகளையும் மற்றும் குற்றப்பிரிவு-குற்றப் புலனாய்வு கட்டுப்பாட்டு அறையில் கணினி வழி குற்றத் தடயங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் நவீன சாதனங்களையும் பார்வையிட்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஆயுதப்படை வளாகத்தில் 11 கோடியே 57 லட்சத்து 40 ஆயிரம் ரூபாடீநு மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 144 குடியிருப்புகள்; சேலம் மாவட்டம் - கருமலைக்கூடலில் 22 குடியிருப்புகள்; திருநெல்வேலி மாநகரம் - மேலப்பாளையம் ஆயுதப்படை வளாகம் மற்றும் மூன்றடைப்பு ஆகிய இடங்களில் 61 குடியிருப்புகள்; திண்டுக்கல் மாவட்டம் - கள்ளிமந்தயம் மற்றும் சத்ரபட்டி ஆகிய இடங்களில் 6 குடியிருப்புகள்; தஞ்சாவூர் மாவட்டம் - தஞ்சாவூர் ஆயுதப்படை வளாகத்தில் 50 குடியிருப்புகள்; காஞ்சிபுரம் மாவட்டம் - ஆயுதப்படை வளாகத்தில் 33 குடியிருப்புகள்; விழுப்புரம் மாவட்டம் - உளுந்தூர்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல்

10-ஆம் அணி, கஞ்சனூர், நல்லாள் பிள்ளை பெற்றாள் ஆகிய இடங்களில் 130 குடியிருப்புகள்; திருவண்ணாமலை மாவட்டம் - வேட்டவலம், கடலாடி மற்றும் ஆரணி ஆகிய இடங்களில் 58 குடியிருப்புகள்; கடலூர் மாவட்டம் - கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் 110 குடியிருப்புகள்; சென்னை மாவட்டம் – புனித தோமையார் மலையில் 94 குடியிருப்புகள்; விருதுநகர் மாவட்டம் - கீழராஜகுலராமனில் 11 குடியிருப்புகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - மத்திய சிறைசாலை எதிரிலும்

சிறுகனூரிலும் 103 குடியிருப்புகள்; புதுக்கோட்டை மாவட்டம் - கரம்பகுடியில் 12 குடியிருப்புகள்; கரூர் மாவட்டம் - சிந்தாமணிபட்டியில் 3 குடியிருப்புகள்; நாமக்கல் மாவட்டம் - ஜேடர்பாளையம் மற்றும் முளசையில் 21 குடியிருப்புகள்; திருவள்ளூர் மாவட்டம் - மீஞ்சூரில் 15 குடியிருப்புகள்;

என மொத்தம் 65 கோடியே 59 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 873 காவல் துறையினர் குடியிருப்புகள்; சேலம் மாநகரில் – கருமலைகூடல் மற்றும் சூரமங்கலம், திருப்பூர் மாவட்டம் - ஊத்துக்குளி, திருநெல்வேலி மாவட்டம் - திருநெல்வேலி நகரம், ஊத்துமலை மற்றும்

தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம் - புதுக்கடை, தூத்துக்குடி மாவட்டம் - தருவைக்குளம் மற்றும் கோவில்பட்டி மேற்கு, இராமநாதபுரம் மாவட்டம் - மண்டலமாணிக்கம் மற்றும் பெருநாழி, திண்டுக்கல் மாவட்டம் - ரெட்டியார்சத்திரம் மற்றும் நெய்காரன்பட்டி, தேனி மாவட்டம் - போடி நாயக்கனூர், சின்னமனூர் மற்றும் கம்பம் (வடக்கு), மதுரை மாவட்டம் - வில்லூர், மேலூர் மற்றும் பெருங்குடி, நாகப்பட்டினம் மாவட்டம் - வாய்மேடு மற்றும் வேளாங்கன்னி, தஞ்சாவூர் மாவட்டம் - திருநீல்குடி, திருப்பனந்தாள் மற்றும் மருவூர், புதுக்கோட்டை மாவட்டம் - அறந்தாங்கி, ஏம்பல் மற்றும் மணமேல்குடி, சென்னை மாநகரம் - நசரத்பேட்டை, ராயபுரம் மற்றும் பீர்க்கன்கரணை,

வேலூர் மாவட்டம் - பரதராமி, உமராபாத் மற்றும் காட்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் – கீழ்பெண்ணாத்தூர் ஆகிய இடங்களில் 16 கோடியே 6 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய்

மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 34 காவல் நிலையங்கள்; தூத்துக்குடி மாவட்டம் - ஸ்ரீவைகுண்டம் மற்றும் நாமக்கல் மாவட்டம் - வெள்ளூர் ஆகிய இடங்களில் 54 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம் - சிறப்பு புலனாய்வுத் துறைக்கான சிறப்புக் கோட்டம்;

திருவாரூர் மாவட்டம் - மாவட்ட காவல் அலுவலகம்; தஞ்சாவூர் மாவட்டம் - காவல்துறை துணைத் தலைவர் குடியிருப்பு; திருவள்ளூர் மாவட்டம் - கும்மிடிபூண்டி மற்றும் விழுப்புரம் மாவட்டம் - கள்ளகுறிச்சி ஆகிய இரண்டு இடங்களில் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு; ஆவடி சாந்தி நகரில் தமிடிநநாடுசிறப்பு காவல் 13 அணிக்கான தங்கும் அறை; வேலூர் மாவட்டம் - சேவூரில் தமிடிநநாடு சிறப்பு காவல் 15 ஆம் அணி ஆயுதக்கூடம், சேமிப்பு கிடங்கு மற்றும் பாசறை கட்டடங்கள்; திருநெல்வேலி மாவட்டம் - குற்ற புலனாடீநுவுத் துறைக்கான ஊரக காவல் நிலையம் மற்றும் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை கட்டடங்கள்; தூத்துக்குடி மாவட்டம் - வல்லநாட்டில் அதிரடிப்படைக்கான தங்கும் அறை மற்றும் பேரூரணியில் காவல் பயிற்சி பள்ளிக்கான உட்கட்டமைப்பு வசதிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - காவல் பயிற்சி பள்ளிக்கான நிரந்தர நிர்வாக கட்டடம் மற்றும் தேனியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை காவல் நிலையம்; என மொத்தம் 17 கோடியே 88 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 13 கட்டடங்கள்; திருவண்ணாமலை மாவட்டம் - செடீநுயாறில் 13 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினருக்கான குடியிருப்புகள் மற்றும் விருதுநகரில் 2 தீயணைப்புத் துறை அலுவலர் குடியிருப்பு என 1 கோடியே 42 லட்சத்து 3 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை குடியிருப்புகள்; வேலூர் மாவட்டம் - சோளிங்கரில் 32 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய கட்டடம்; சென்னை - மாதவரத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம்; நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியை தலைமையிடமாகக் கொண்டு 55 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலர் அலுவலகம் என மொத்தம் 3 கோடியே 4 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

ஆக மொத்தம், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளுக்காக 113 கோடியே 31 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டடங்களை தமிழ்நநாடு முதல்வர் இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், (ஓய்வு), உள்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் ராமானுஜம், சென்னை மாநகர காவல்துறை ஆணையர்

ஜார்ஜ், தமிடிநநாடு காவலர் வீட்டு வசதிக் கழகத் தலைவர் ஷகீல் அக்தர், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஆர்.சி.குடவ்லா,மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x