Published : 29 Aug 2021 03:13 AM
Last Updated : 29 Aug 2021 03:13 AM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘ஊன்றுகோல் திட்டத்தின்’ கீழ் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் கார்மேகம் பார்வையிட்டார்.

சேலம்

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில், ‘ஊன்றுகோல் திட்டத்தின்’ கீழ் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

முகாமை, சேலம் ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்து கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு, கல்வி, பொருளாதாரம் எதிர்கால வாழ்க்கை தர மேம்பாடு உள்ளிட்ட அனைத்தையும் ஏற்படுத்தி கொடுக்க பள்ளிக் கல்வி துறை, சமூக நலன் உள்ளிட்ட துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவிலான ‘ஊன்றுகோல்’ என்ற பணிக்குழு ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதற்கென ஆட்சியர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது. உதவி வேண்டுவோர் இந்த மையத்தை தொடர்பு கொண்டு கோரிக்கைகளை பதிவு செய்து கொள்ளும் வகையில் வாட்ஸ்அப் வசதி உள்ள செல்போன் எண். 93857 45857 மற்றும் மின்னஞ்சல் முகவரி postcovid19helpteamslm@gmail.com ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறையில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக தொடர்புடைய அலுவலர்களுக்கு தகவல் அனுப்பப்படும். தொடர்புடைய அலுவலர்கள் குறைகளை களைய துரித நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

சேலம் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஊன்றுகோல் திட்டத்தின் மூலம் இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள 35 தனியார் நிறுவனங்கள் மூலம் கரோனா தொற்றின் காரணமாக குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்கு இம்முகாமில் தகுதிக்கு தகுந்தார்போல வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

முகாமில், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) லதா, சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x