Published : 12 Mar 2014 12:00 AM
Last Updated : 12 Mar 2014 12:00 AM

திமுக வேட்பாளர் பட்டியல்: கடைசி நேரத்தில் நடந்தது என்ன?

வேட்பாளர் தேர்வில் கனிமொழி தரப்பு ஏமாற்றம் அடைந்துள்ளதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

தென்சென்னைக்கு அறிவிக்கப்பட்ட டி.கே.எஸ். இளங்கோவன் கருணாநிதியின் தேர்வு என்பது உண்மை இல்லை. அங்கு ஸ்டாலினின் ஆதரவாளரான முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன்தான் அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால், சில உட்கட்சி பிரச்சினைகளால் மா.சு-வே ஒதுங்கிக்கொண்டாராம்.

விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை என்றாலும்கூட குஷ்புக்கு அந்தத் தொகுதியை அளிக்க விரும்பினார் கருணாநிதி. இதற்கு துர்கா ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, டி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது என்கிறார்கள்.

இதுகுறித்து தி.மு.க. வட்டாரத்தில் கூறப்படுவதாவது: துரைமுருகனின் மகனுக்கும் ஐ.பெரியசாமியின் மகனுக்கும் வாய்ப்பளிக்க கருணாநிதி விரும்பினார். சீனியர்களில், ஸ்டாலின் உட்பட அனைவ ரிடமும் அனுசரித்துப் போகிறார் என்பதாலும், அவரது கல்லூரி சீட் விவகாரங்களில் அனுசரித்து நடந்து கொள்வதாலும் ஜெகத்ரட்சகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்கிறார்கள்.

ஓரங்கட்டப்பட்ட பழனிமாணிக்கம்

டி.ஆர்.பாலு-வுக்கு திருச்சி தொகுதியை ஒதுக்கிவிட்டு, பழநிமாணிக்கத்தை தஞ்சாவூர் தொகுதிக்கு அறிவிப்பதே கருணாநிதியின் திட்டம். இவர் கனிமொழி வட்டத்தில் இருக்கிறார் என்பதாலேயே ஓரங்கட்டப் பட்டதாக பேசுகிறார்கள்.

‘கனிமொழி ஆதரவாளர்’?

கனிமொழி பரிந்துரைத்த 5 நபர்களில் ஒருவருக்குக் கூட சீட் இல்லை. கனிமொழி பரிந்துரைக்காத நபர்களில்கூட ‘கனிமொழி ஆதரவாளர்’ என்கிற லேசான சந்தேகம் ஏற்பட்டாலே அவர்களும் பரிசீலனைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர் என்கிறார்கள். கடைசி 2 நாட்களில் நடந்த விஷயங்கள் கருணாநிதிக்கோ கனிமொழிக்கோ தெரிவிக்கப்படவில்லை. இருவருமே தாங்கள் பரிந்துரைத்த நபர்கள் இறுதிப் பட்டியலில் இருப்பார்கள் என்று நம்பினர்.

10 புதுமுக வேட்பாளர்கள்

தவிர, சேலம் உமாராணி செல்வராஜ், ஈரோடு பவித்திர வள்ளி உள்ளிட்ட 10 புதுமுக வேட் பாளர்கள் மு.க. ஸ்டாலின் குடும்ப ஆதரவாளர்கள் என் கின்றனர்.

வேட்பாளர் தேர்வு குறித்து திமுக-வின் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “அதிகாரங்களை பகிர்ந்துகொள்ளாமல், ஒருவர் பிடியிலேயே மொத்த அதிகாரமும் இருப்பது 2016 சட்டசபை தேர்தலில் திமுக-வுக்கு சாதகமாக அமையாது. ஏனெனில், திமுக ஜனநாயகத்தை மதிக்கும் கட்சி. மாவட்டங்களில் பொறுப்புகளில் இருப்பவர்கள் நீண்ட காலமாக அரசியலில் அவரவர் பகுதியில் செல்வாக்கு படைத்தவர்கள். கருணாநிதி பின்பற்றிய உட்கட்சி ஜனநாயக அணுகுமுறையால் மட்டுமே அவர்களை சமாளிக்க முடிந்தது. ஸ்டாலினால் அது சாத்தியப்படுமா என்பது தெரியவில்லை” என்றார்.

ஆனால், ஸ்டாலின் ஆதரவாளர் களோ, “இது ஜனநாயகக் கட்சி. அதன்படியே பெரும்பான்மையான வேட்பாளர்கள் அந்தந்தத் தொகுதிகளின் மாவட்டச் செய லாளர் பரிந்துரைத்தவர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் மட்டுமே வெகு கவனத்துடன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்கள்.

கடைசி 2 நாட்களில் நடந்த விஷயங்கள் கருணாநிதிக்கோ கனிமொழிக்கோ தெரிவிக்கப்படவில்லை. இருவருமே தாங்கள் பரிந்துரைத்த நபர்கள் இறுதிப் பட்டியலில் இருப்பார்கள் என்று நம்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x