Published : 25 Aug 2021 03:17 AM
Last Updated : 25 Aug 2021 03:17 AM

புதுச்சேரியில் ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய செயல் நகரின் அழகை கெடுத்து ஆபத்தை ஏற்படுத்தும் பேனர்கள்: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனம்

புதுச்சேரி நகரின் அழகை கெடுத்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைப்பது அதிகரித்துள்ளது. இதை புதுச்சேரி அரசு கண்டுகொள்வதில்லை. அதிகாரிகளும் சட்டத்தை நடைமுறைப் படுத்தாமல் மவுனம் காக்கின்றனர்.

புதுச்சேரியில் பொது இடங்க ளில் பேனர்கள், பிளெக்ஸ் போர்டு, கட்அவுட் ஆகியவை வைக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை அதை நடைமுறைப்படுத்து வதில்லை. கடந்த 2016-ல் புதுச் சேரியில் 20 இடங்களில் கட்டணம் செலுத்தி பேனர் வைக்க அனுமதி தரப்பட்டது. அதை மீறுவோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பேனர் கள் அகற்றப்பட்டன. ஆனால் அதிகாரிகள் இதை சரியாக நடை முறைப்படுத்துவதில்லை.

இதுதொடர்பாக பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “புதுச்சேரி யில் ஆளுங்கட்சியாக இருப்போர் பேனர்களை வைப்பது தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக சாலைகளை அடைத்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக கட்டைகள் நீட்டியபடி பேனர்கள் வைக்கப்படு கின்றன. சிக்னல்களை மறைத்தவா றும், சாலையை தோண்டியும், மின்கம்பங்களை ஆக்கிரமித்தும் பேனர்கள் வைப்பது மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது. அரசு கட்டிடங் கள், கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றை மறைத்தும் பேனர்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் எந்ததுறையும் எதையும் கண்டுகொள்வ தில்லை.

விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதன்பிறகாவது பேனர்களை அதிகாரிகளோ, அரசோ கட்டுப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டனர்.

உள்ளாட்சித்துறை தரப்பில் விசாரித்தபோது, “பேனர்களை வைக்க கட்டணம் பெறுவது ஜிஎஸ்டியில் வருகிறது. அதனால் ஏற்கெ னவே பேனர்கள் வைக்க கட்டணம் வசூலிக்கும் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. பேனர்கள் வைக்க கட்டணம் வசூலிப்பதில் சட்டத்திருத்தம் கொண்டு வரும் பணியில் உள்ளோம். விரைவில் அமலாகும்” என்று குறிப்பிட்டனர்.

திமுக மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ கூறுகையில், “தமிழகமுதல்வர் ஸ்டாலின் கட்சியின் நிகழ்வுகளுக்கு பேனர் வைப்பது, வரவேற்பு வளைவுகள் வைப்பது மக்களுக்கு இடையூராக இருக்கும் என்பதால் அவற்றை வைக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வரின் அறிவுறுத்தலை புதுச்சேரி திமுகவினரும் கடை பிடிக்க வேண்டும்.

பிற கட்சியினருக்கு முன்னு தாரணமாக திகழ வேண்டும். திமுகவின் எந்த நிகழ்வுக்கும் பேனர், கட்அவுட் வைப்பதை தவிர்க்க வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வாழ்த்துபேனர், வரவேற்பு வளைவுகள் வைப்பதற்கு பதிலாக கரோனா வால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைக ளுக்கு நலத்திட்ட உதவிகள் தர புதுச்சேரியிலும் அறிவுறுத்தி யுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

தமிழக முதல்வரை போல் புதுச்சேரி முதல்வரும், அமைச் சர்களும் பேனர் வைக்கக்கூடாது என்று ஆதரவாளர்களுக்கு அறிவு றுத்துவார்களா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x