Published : 17 Feb 2016 08:28 AM
Last Updated : 17 Feb 2016 08:28 AM

இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்பு இல்லாதது ஏன்?- அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் உள்ளிட்ட வர்களின் கோரிக்கைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகாதது ஏன் என்று தமிழக அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது தொடர்பாக தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அதிமுக ஆட்சியில் தற்போது தாக் கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கையில், அரசின் நிதிப்பற்றாக் குறை சுமார் ரூ.36 ஆயிரத்து 740 கோடி என்றும், கடன் தொகை ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 31 கோடி என்றும் கூறப்பட்டுள்ளது. இது 5 ஆண்டு கால ஆட்சியின் சாதனையா என்று கேட்கத் தோன்றுகிறது.

கருணாநிதி (திமுக தலைவர்):

அரசு ஊழியர்கள் உட்பட தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் பலரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற் றப்படவில்லை.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):

தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கடந்த 5 ஆண்டுகளாக அளிக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின் தொகுப்பாகவும், தமிழக முதலமைச்சரை பாராட்டியும் புகழ் பாடியும் எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பாகவும்தான் உள்ளது. இதில் வேறு எந்த முக்கிய அம்சமும் இருப்பதாக தெரிய வில்லை.

தமிழகத்தின் நிதி நிலை 5 ஆண்டு களில் மிக மோசமான நிலைக்கு சென்றிருப்பதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. நிதி ஒதுக்கீடு ஏதுமின்றி அவினாசி-அத்திக்கடவு திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளது ஏமாற்று வேலையாகும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவினர்களின் கோரிக்கைகளை ஏற்கும் வண்ணம் நிதிநிலை அறிக் கையில் எதுவும் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட் அவர்களை அவர்களே பாராட்டிக்கொள்ளும் வகையில் உள்ளது. வேளாண்மை துறையில் 2-ம் பசுமைப் புரட்சி, தனி நபர் வருமானத்தை 3 மடங்கு உயர்த்துவது, மோனோ ரயில் திட்டம், 6 ஆடை பொருளாதார மண் டலங்கள் அமைப்பது என அதிமுக அளித்த எந்த வாக்குறுதியும் நிறை வேற்றப்படாத சூழலில், கடந்த தேர் தலில் அதிமுக அளித்த வாக்குறுதி கள் அனைத்தும் நிறைவேற்றப்பட் டுள்ளதாக நிதியமைச்சர் கூறுவதில் துளியும் உண்மை இல்லை.

சரத்குமார் (சமக தலைவர்):

தமிழக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையில், அத்திக்கடவு - அவினாசி திட்டம் செயல்படுத்தப் படும் என்று கூறப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

மேலும், மகாமகத் திருவிழாவை முன்னிட்டு ரூ.135.38 கோடி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதும், சென்னை மெட்ரோ ரயில் திட்டத் துக்கு ரூ.1,032.55 கோடி ஒதுக்கப் பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது.

ஒய்.ஜவஹர் அலி (ஐஎன்எம்எல் தலைவர்):

இடைக்கால நிதி நிலை அறிக்கை தமிழக மக்களின் உணர்வுகளின் பிரதிபலிப்பாக உள்ளது. தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலம் ஆக்கும் வகையில் அரசின் இடைக்கால பட்ஜெட் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x