Published : 15 Aug 2021 03:24 AM
Last Updated : 15 Aug 2021 03:24 AM

வேளாண் பட்ஜெட்: நெல் கொள்முதல் விலை உயர்வு; 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள்

2021-22 நிதியாண்டில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக குவின்டாலுக்கு, சன்ன ரக நெல்லுக்கு ரூ.1,960, சாதாரண ரகத்துக்கு ரூ.1,940 எனமத்திய அரசு நிர்ணயித்துள்ளது. தமிழகஅரசு நடப்பு ஆண்டில் கொள்முதல் விலையை உயர்த்தி, குவின்டாலுக்கு சன்ன ரகத்துக்குரூ.70-ல் இருந்து ரூ.100 ஆகவும், சாதாரணரகத்துக்கு ரூ.50-ல் இருந்து ரூ.75 ஆகவும் ஊக்கத்தொகை நிர்ணயித்து கொள்முதல் செய்யும். இதனால் சன்ன ரக நெல் ஒரு குவின்டால் ரூ.2,060, சாதாரண ரக நெல் ரூ.2,015 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதன்மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.99.38 கோடி செலவாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x