Published : 12 Aug 2021 05:44 PM
Last Updated : 12 Aug 2021 05:44 PM

சுதந்திர தின விழா; பொதுமக்கள், மாணவர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டுகோள் 

சுதந்திர தின விழாவுக்கான ஒத்திகை நிகழ்ச்சி.

சென்னை

சுதந்திர தின விழாவைக் காண, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் நேரில் வருவதைத் தவிர்க்க வேண்டும் என, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, பொதுத்துறை அரசுச் செயலாளர் இன்று (ஆக. 12) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"இந்தியச் சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் தலைமைச் செயலகக் கோட்டைக் கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் நாள் காலை 09.00 மணிக்குத் தேசியக் கொடியினை ஏற்றிச் சிறப்பிப்பார். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்பர்.

2. கரோனா தொற்றால் நிலவும் அசாதாரணச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு, பள்ளிக் குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. சுதந்திரப் போராட்ட வீரர்களின் வயது மூப்பினைக் கருத்தில் கொண்டும், கரோனா தொற்றுப் பரவலைத் தவிர்க்கும் விதமாக, மாவட்டந்தோறும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி, உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

3. சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளி / ஒலி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், இந்தாண்டு, பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் மூத்தக் குடிமக்கள் விழாவினைக் காண நேரில் வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுதந்திர தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி / வானொலியில், கண்டு / கேட்டு மகிழுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x