Published : 17 Feb 2016 08:30 AM
Last Updated : 17 Feb 2016 08:30 AM

சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டம்: பன்னாட்டு நிறுவனங்களிடம் நிதியுதவி பெற நடவடிக்கை

சென்னை சுற்றுவட்டச் சாலை திட்டத்தை செயல்படுத்த பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவியைப் பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011-ம் ஆண்டு மே மாதம் முதல் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக ஒருங் கிணைந்த சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.14 ஆயிரத்து 841 கோடி செல வில் பணிகள் செயல்படுத்தப் பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 935 கி.மீட்டர் மாநில நெடுஞ்சாலைகளும், 6 ஆயிரத்து 740 கி.மீட்டர் முக்கிய மாவட்டச் சாலைகளும், 11 ஆயிரத்து 879 கி.மீட்டர் இதர மாவட்டச் சாலைகளும் அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த சாலைக் கட் டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக் காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.2 ஆயிரத்து 800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கியின் உதவியோடு 2011-12-ம் ஆண்டில் இருந்து ஆயிரத்து 184 மீட்டர் சாலை மேம் பாட்டுப் பணிகளையும், 914 பாலப் பணிகளையும் ரூ.2 ஆயிரத்து 563 கோடி செலவில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. திருமங்கலம், மூலக்கடை சந்திப்பு, முடிச்சூர்-பெரும்புதூர் சாலையில் உள்ள பாலம் உள்ளிட்ட பணிகள் ரூபாய் ஆயிரத்து 195 கோடியே 35 லட்சம் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரயில்வே பணிகள் திட்டத்தின் கீழ் ஆயிரத்து 116 கோடியே 94 லட்சம் மதிப்பில் 52 ரயில்வே மேம்பாலங்கள், சுரங்க பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாவது கட்டப் பணிகள் ரூ.5 ஆயிரத்து 171 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியோடு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் ரூ.2 ஆயிரத்து 653 கோடி செலவில் 12 சாலைப் பணிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்காக இடைக்கால பட்ஜெட்டில் ஆயிரத்து 220 கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் ரூ.213 கோடியே 69 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள நான்குவழி வெளிவட்டச் சாலைக்கான ஒப்பந்தப் புள்ளிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னை சுற்றுவட்டச் சாலைக் கான திட்ட அறிக்கை முடிவு செய்யப்படும் நிலையில் உள்ளது. இதை செயல்படுத்த பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து நிதியுதவியை பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x