வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை: 2 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம்

வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை: 2 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம்
Updated on: 
1 min read

சென்னை: இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில், முதல் ரயில் சேவை வடபழனி - பூந்​தமல்லி இடையே தொடங்​கிய நிலை​யில், முதல் நாளில் வெறும் 5 மணி நேரத்​தில் 25 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணித்​துள்​ளனர்.

இரண்டு நாட்​களில் மொத்​தம் 70 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணித்​துள்​ள​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. சென்​னை​யில் வடபழனி - பூந்​தமல்லி (15 கி.மீ.) வழித்​தடத்​தில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்​திர மோடி, முதல்​வர் விஜய் ஆகியோர் இணைந்து நேற்று முன்​தினம் காலை தொடங்கி வைத்​தனர்.

இதன்​பிறகு, இத்​தடத்​தில் பொது​மக்​களுக்​கான மெட்ரோ ரயில் சேவை மாலை​யில் தொடங்​கியது. இரு மார்க்​கத்​தி​லும் பயணி​கள் மிகுந்த உற்​காகத்​துடன் மெட்ரோ ரயில்​களில் பயணித்​தனர்.

இந்​நிலை​யில், இத்​தடத்​தில் இயக்​கப்​பட்ட மெட்ரோ ரயில்​களில் நேற்று முன்​தினம் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 5 மணி நேரத்​தில் 25,474 பேர் பயணித்​துள்​ளனர்.

2-வது நாளான நேற்​றும் காலை முதல் மெட்ரோ ரயி​லில் பயணிப்​போர் எண்​ணிக்கை படிப்​படி​யாக அதி​கரித்து வந்​தது. குறிப்​பாக காலை, மாலை​ நெரிசல் மிகுந்த நேரத்தில் கூட்டம் அலைமோ​தி​யது.

நேற்று 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணித்​துள்​ள​தாக மெட்ரோ ரயில் அலு​வலக வட்​டாரத்​தில் தெரிவிக்​கப்​பட்​டது. இரண்டு நாட்​களில் 70 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பயணித்​துள்​ளனர்.

இந்த தடத்​தில் தற்​போது வரை 11 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் பயன்​பாட்​டுக்கு வந்​துள்​ளன. இதன்​மூலம் மக்​களின் பயண நேரம் குறை​யும். போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கும் அவதி​யும் இனி இருக்​காது.

கோயம்​பேடு-வர்த்தக மையம் தடம்

இரண்​டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்​டத்​தில் மாதவரம் - சோழிங்​நல்​லூர் வரையி​லான 5-வது வழித்​தடத்​தின் ஒரு பகு​தி​யாக கோயம்​பேடு முதல் நந்​தம்​பாக்​கத்​தில் உள்ள சென்னை வர்த்தக மையம் வரையி​லான உயர்​மட்ட வழித்​தடத்தை பயன்​பாட்​டுக்கு கொண்டு வர மெட்ரோ ரயில் நிர்​வாகம் முயற்சி எடுத்து வரு​கிறது.

இத்​தடத்​தில் மொத்​தம் 12 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் இடம்​பெற வாய்ப்​புள்​ளது. அடுத்த 6 மாதங்​களில் இத்​தடத்தை மக்​கள் பயன்​பாட்​டுக்கு கொண்​டுவர திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

வடபழனி - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவை: 2 நாட்களில் 70 ஆயிரம் பேர் பயணம்
​ஆவடி: போலி வங்கி காசோலை தயாரித்த 6 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in