​ஆவடி: போலி வங்கி காசோலை தயாரித்த 6 பேர் கைது

​ஆவடி: போலி வங்கி காசோலை தயாரித்த 6 பேர் கைது
Updated on: 
1 min read

ஆவடி: எண்​ணூர் அடுத்த எர்​ணாவூர் பகு​தி​யில் போலி வங்​கிக் காசோலைகள், ஆவணங்​கள், கல்​விச் சான்​றிதழ்​கள் தயாரிக்​கப்​பட்டு வரு​வ​தாக ஆவடி காவல் ஆணை​யரகத்​துக்கு நேற்று ரகசி​யத் தகவல் கிடைத்​தது.

இதையடுத்து ஆணை​யர் செந்​தில்​கு​மார் உத்​தர​வின் பேரில், தனிப்​படை போலீ​ஸார் நேற்று எண்​ணூர் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகு​தி​களில் தீவிர கண்​காணிப்​பில் ஈடு​பட்​டனர்.

அப்​போது, விம்கோ நகர், மெட்ரோ ரயில் நிலை​யம் மற்​றும் பேருந்து நிலை​யம் அரு​கில் சந்​தேகத்​துக்​கிட​மான வகை​யில் நின்று கொண்​டிருந்த ஜெயக்​கு​மார் என்​கிற ஸ்டீபன் (38) என்​பவரை பிடித்து போலீ​ஸார் சோதனை செய்​தனர்.

அச்​சோதனை​யில், போலி​யான வங்​கிக் காசோலைகள், தனி​யார் மற்​றும் அரசு அலு​வலக ரப்​பர் ஸ்டாம்​பு​கள், கல்​விச் சான்​றிதழ்​கள் மற்​றும் அதனை அச்​சடிக்​கும் பேப்​பர்​களை ஜெயக்​கு​மார் வைத்​திருந்​தது தெரிய​வந்​தது.

இதையடுத்​து, ஜெயக்​கு​மாரிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை நடத்​தினர். அவ்​வி​சா​ரணை​யில், ஜெயக்​கு​மார், எர்​ணாவூரில் போலிப் பத்​திரங்​கள் மற்​றும் ரப்​பர் ஸ்டாம்​பு​களை வைத்து வங்கி காசோலைகள், தனி​யார் மற்​றும் அரசு நிறு​வனங்​கள், பள்ளி மற்​றும் கல்​லூரி​களின் போலி​யான சான்​றிதழ்​களை தயார் செய்து வந்​தது தெரிய​வந்​தது.

இதுகுறித்து எண்​ணூர் குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவுசெய்​து, ஜெயக்​கு​மார் மற்​றும் அவரது கூட்​டாளி​களான கருணாகரன், சத்​தி​யமூர்த்​தி, கருணாநி​தி, விக்​டர், ஜான்​சன் ஆகிய 6 பேரை கைதுசெய்​து, அவர்​களிட​மிருந்து போலி சான்​றிதழ்​கள், லேப் டாப், பிரின்​டர், ரப்​பர் ஸ்டாம்​பு​கள் உள்​ளிட்​ட​வை​களை பறி​முதல்​ செய்​தனர்.

​ஆவடி: போலி வங்கி காசோலை தயாரித்த 6 பேர் கைது
சிங்கப்பெருமாள் கோவில் | வீட்டு மின் இணைப்புக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்: உதவி பொறியாளர், ஃபோர்மேன் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in