மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
Updated on
1 min read

மதுரை: மதுரை மாவட்டத்தில் வழக் கத்தைவிட பருவகால காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இதுவரை மாவட்டத்தில் 70 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மாறு பட்ட பருவநிலை மற்றும் மழை காரணமாக பருவகால காய்ச்சல் பரவல் தொடங்கியுள்ளது. டெங்கு பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற் பட்டுள்ளது. இந்த மாதம் மட்டும் டெங்குவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆக உள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஸ் குமார் கூறியதாவது: வழக்கமாக காய்ச்சலுக்காக நாள்தோறும் 20 பேர் மருத்துவமனைக்கு வருகின்றனர்.

தற்போது, இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. நேற்று, 5 குழந் தைகள் உள்பட 27 பேர் காய்ச்சல் பாதிப்புடன் வந்தனர். இவர்களில் ஒருவருக்கு மட்டும் டெங்கு பாதிப்பு கண்டறியப் பட்டு உரிய சிகிச்சை அளிக்கப் படுகிறது.

டெங்கு மற்றும் தீவிர காய்ச் சலால் பாதிக்கப்படுவோருக்கு ஆக்சிஜன் வசதியுடன் தனிப் படுக்கைகள் பெரியவர் களுக்காக 30, குழந்தைகளுக்கு 10 எண்ணிக்கையில், சிறப்பு காய்ச்சல் வார்டுகள் அமைக்கப் பட்டுள்ளன.

காய்ச்சல் பாதிப்புடன் வருபவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் விரைவாக செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் பொற் செல்வன் கூறியதாவது: மாவட்டத்தில் வழக்கமாக வாரத்துக்கு 160 முதல் 180 பேர் காய்ச்சல் சிகிச்சைக்காக வருவர். தற்போது, இந்த எண் ணிக்கை 200 முதல் 210 பேராக அதிகரித்துள்ளது.

பருவமழை பொய்த்ததாலும் பருவ கால காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்போடு வரும் 100 பேரில் 2 பேருக்கு டெங்கு உறுதி செய் யப்படுகிறது. தற்போது மாநகரில் ஒருவர் அரசு ராஜாஜி மருத்துவமனையிலும், புறநகர் பகுதியில் ஒருவர் நாகமலை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை பெறு கின்றனர். பொதுமக்கள், காய்ச்சல் அறிகுறி இருந்தால் உட னடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறினார்.

மதுரையில் இதுவரை 70 பேருக்கு டெங்கு பாதிப்பு - பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
நேபாள வெள்ளம்: உயிரிழப்பு 270 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in