Published : 30 Jul 2021 07:59 PM
Last Updated : 30 Jul 2021 07:59 PM

விஜயகாந்த், பிரேமலதா, கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் உத்தரவு

2012 முதல் 2021 வரை விஜயகாந்த், பிரேமலதா, கனிமொழி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "2012 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவர் விஜய்காந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதாரணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலாளர்,

ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் பழ.கருப்பைய்யா மற்றும் நாஞ்சில் சம்பத், அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன், (RSYF), திராவிட முன்னேற்றக் கழகத்தின் கே.என்.நேரு மற்றும் சா.மு.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ்.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து அவதூறு வழக்குகளையும் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x