Last Updated : 22 Jul, 2021 03:14 AM

 

Published : 22 Jul 2021 03:14 AM
Last Updated : 22 Jul 2021 03:14 AM

திருச்சி மாநகரில் நிகழாண்டில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 125 பேர் பாதிப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி அதிகாரிகள்

திருச்சி

திருச்சி மாநகரில் நிகழாண்டில் இதுவரை 125-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப் பட்டு, ஒரு குழந்தை உயிரிழந்துள்ள நிலையில், மாநகராட்சி நகர் நலப் பிரிவினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருப்ப தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், திருச்சி மாநகரில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள் ளனர். நிகழாண்டில் இதுவரை 125-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டில் திருச்சி மாநகரில் 150-க்கும் அதிகமானோருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற் பட்டது. கரோனா பாதிப்பால் உயிரிழப்புகள் நேரிட்டாலும், டெங்கு காய்ச்சலால் மாநகரில் உயிரிழப்பு நேரிடவில்லை. ஆனால், நிகழாண்டில் டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க மாநகராட்சி நகர் நலப் பிரிவு உரிய நடவடிக்கை எடுக்காமல் தொடர்ந்து அலட்சியமாக உள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கள் கூறியது:

கடந்த ஆண்டுகளில் மாநகரில் யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால், பாதிக்கப் பட்டவர்களின் வீடு மட்டுமின்றி மற்றும் அருகிலுள்ள வீடுகளையும் மாநகராட்சி நகர் நலப் பிரிவு அலுவலர்கள் ஆய்வு நடத்தி, பிறருக்கு டெங்கு பரவாத வகையில் உரிய தடுப்பு நடவடிக் கைகளை மேற்கொள்வார்கள்.

அப்போது, வீடுகள், கல்வி நிலை யங்கள், நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் உட்பட மாநகர் முழுவதும் ஆய்வு நடத்தி, டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அப்புறப்படுத்தா தவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக் கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு நேரிட்ட பகுதிகளை மாநகராட்சி நகர் நலப் பிரிவு அலுவலர்கள் இதுவரை ஆய்வு செய்யவில்லை.

அதேபோல, டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அப்பு றப் படுத்துவது குறித்து பொது மக்களிடத்தில் இதுவரை விழிப் புணர்வு ஏற்படுத்தவும் நடவ டிக்கை எடுக்கவில்லை. இப் பணியில் ஈடுபடுத்த டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களும் நியமிக் கப்படவில்லை என்றனர்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ப.மு.நெ.முஜிபுர் ரகு மான் கூறும்போது, ‘‘மாநகரில் டெங்கு கொசு உற்பத்தி ஆதா ரங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி உடனடியாக தொடங்கப் படும். இதற்காக தேவையான எண்ணிக்கையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக் கப்படுவர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x