Published : 20 Jul 2021 03:14 AM
Last Updated : 20 Jul 2021 03:14 AM

தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தில் 3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க என்எல்சி அனுமதி: நெய்வேலி இல்லத்தில் பட்டியலை வெளியிட்டார் நிறுவன தலைவர்

கோப்புப்படம்

கடலூர்

என்எல்சி நிறுவனத்தில் உள்ள தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம்வருடாந்திர பராமரிப்புப் பணி களில் பணிபுரிந்து வரும் தொழி லாளர்களை, தமிழக அரசின் கீழ் செயல்படும் என்எல்சி தொழிலக கூட்டுறவு சேவைகள் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான பணிமூப்புப் பட்டியலை என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் வெளி யிட்டார்.

என்எல்சி இந்தியா நிறு வனத்தின் பணிகளை, தமிழக அரசின் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் தொழிலக கூட்டுறவு சேவை சங்கம் மற்றும் அலுவலக பராமரிப்பு சேவை சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலமாக பணியாற்றும் தொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்தொழிலாளர்களுக்கு கூடுதல்ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்குவது தொடர்பாக கடந்த 07.08.2020 அன்று, 1947-ம்ஆண்டின் தொழிற் தகராறு சட்டத்தில் உள்ள 12(3) பிரிவின்கீழ் என்எல்சி இந்தியா நிறுவனஉயர் அதிகாரிகள் முன்னிலையில், ஒப்பந்ததாரர் களுக்கும், ஒப்பந்த தொழிலாளர்கள் சார்ந்துள்ள தொழிற்சங்கங் களுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்த உடன்படிக்கையின்படி உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிப்பு, ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரிப்பது, வருடாந்திர பராமரிப்பு பணிகளில் என்எல்சி தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தின் மூலம் பணியாற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 5 ஆயிரத்திலிருந்து 8 ஆயிரமாக அதிகரிப்பது, இதற்கான பட்டியல் ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட பணிமூப்பு பட்டியல் அடிப்படையில் அமைப்பது என ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதன்படி ஒப்பந்த ஊழியர் களை என்எல்சி தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான நடைமுறைகளை கண்டறிய என்எல்சி நிறுவன உயர் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டது. அக்குழுஉச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே சமர்பிக்கப்பட்ட பணிமூப்பு பட்டியலிருந்து 3,509 தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் முறையீடுகளை பரிசீலித்த பின்னர் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பாக நெய்வேலி இல்லத்தில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்வில் என்எல்சி மனிதவள இயக்குநர் விக்ரமன், செயல் இயக்குநர் சதீஷ்பாபு மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில் என்எல்சி தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் ராகேஷ்குமார் 3,509 தொழிலாளர்களின் பட்டியலை வெளியிட்டார். என்எல்சியின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொழிலாளர் முன்னேற்ற சங்கம், கனரக தொழிற்பிரிவு அண்ணா தொழிற்சங்க பிரிதிநிதிகள், என்எல்சி தொழிலக கூட்டுறவு சேவைகள் சங்க மேலாண் இயக்குநர் மற்றும் என்எல்சி கூட்டுறவு சேவை சங்கத்தின் தலைவர் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த தகவலை என்எல்சி மக்கள் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.

கூட்டுறவு சேவை சங்கத்தின் வழியே தேர்வாயிருக்கும் 3,509தொழிலாளர்கள் நாளாவட்டத்தில் நிரந்தர தொழிலாளர்கள் ஆவதற்கான சலுகை மூப்பு அவர்களுக்கு கிடைக்கிறது. இதனால் இதனை என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x