Last Updated : 17 Jun, 2014 08:48 AM

 

Published : 17 Jun 2014 08:48 AM
Last Updated : 17 Jun 2014 08:48 AM

ஜெயலலிதா மனுவை விசாரிக்க நீதிபதி தயக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர் பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள வழக்கை விசா ரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி தன் தயக்கத்தை தெரிவித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதி மன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய சொத்து தன்னுடையது என்று லெக்ஸ் பிராப்பர்டீஸ் என்ற நிறுவனம் உரிமை கோரியுள்ளது.

இதில் முடிவு தெரியும்வரை பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஜெயலலிதா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை ஏற்று இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை நீக்கக் கோரி, திமுக பொதுச் செயலா ளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய் துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் விக்ரம்ஜித் சென், சிவ கீர்த்தி சிங் முன்பு திங்களன்று விசாரணைக்கு வந்தது.

மனுவைப் பார்த்த நீதிபதி விக்ரம் ஜித்சென், ‘இந்த வழக்கை நான் விசாரிப்பதில் உங்களுக்கு ஆட்சே பணை உண்டா?’ என்று கேட்டார். நீதிபதி விக்ரம்ஜித்சென், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர். சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் நியமனம் உள்ளிட்ட பல மனுக்கள் அவரிடம் விசாரணைக்கு வந்ததால் நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘ஆட் சேபணை எதுவும் இல்லை’ என்றார். இதையடுத்து, மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இருதரப்பிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை படிக்க வேண்டியிருப்பதால் வழக்கை செவ்வாயன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அறிவித்து ஒத்திவைத்தனர்.

அன்பழகனுக்கு தகுதி இல்லை

முன்னதாக, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

இடைக்கால தடையை நீக்கக் கோரி க.அன்பழகன் மனு தாக்கல் செய்துள் ளார். அவர் ஒரு அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர். அவருக்கும் இந்த வழக்குக்கும் தொடர்பில்லை.

அரசு வழக்கறிஞர் பாரபட்சமின்றி நடுநிலையுடன் நடந்து கொள்வது அவரது கடமை. அதில் தலையிடு வதும், அவரது நடத்தையில் குறை சொல்வதும் நீதிமன்ற நடவடிக்கையில் தலையிடும் செயலாகும். சொத்துக் களை முடக்கி வைத்துள்ள உத்தரவை வாபஸ் பெற கடந்த மாதம் 26-ம் தேதி ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அன்பழகன் தரப்பில் கூறப்பட் டுள்ள குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. இந்த வழக்கில் தலையிட அவருக்கு தகுதி இல்லை. எனவே, அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு அவசியம் இல்லை

பெங்களூர் வழக்குக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

இது வழக்கை காலதாமதப் படுத்த தொடரப்பட்டுள்ள மனு. சொத்து வழக்கு 2010-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. வழக்கு முடியும் தருவாயில் உள்ளது.

இந்த வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட போது, சொத்துக்களை முடக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் மாற்றப்படவில்லை.

லெக்ஸ் பிராபர்டீஸ் தொடர்பான வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. மொத்தம் 12 நிறுவனங்கள் சொத்துக்களை தங்களுடையவை என்று கோரியுள்ளன.

இந்த நிறுவனங்களின் சொத்துக்கள் ஏற்கனவே சிறப்பு நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால், சொத்துக்களை முடக்கும் உத்தரவை வாபஸ் பெறுவதாக கடந்த மாதம் 26-ம் தேதி அரசு வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். எனவே, ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு இப்போது அவசியம் இல்லை.

இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x