Published : 18 Jul 2021 03:15 AM
Last Updated : 18 Jul 2021 03:15 AM

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் 1,527 பெண்களுக்கு தங்கத்துடன் திருமண நிதி: அமைச்சர் பொன்முடி வழங்கினார்

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட் டங்களில் 1,527 பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங் கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் நேற்று ஏழைப் பெண்களுக்கு திருமணத்திற்கு உதவி திட்டத்தின் கீழ் 752 பயனாளிகளுக்கு அமைச்சர் பொன்முடி நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் செந்தில்குமார், புகழேந்தி,எஸ்பி ஜியா வுல்ஹக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசியது: ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் நடுத்தர மக்களின் நல்வாழ்விற்காகவும், பொருளாதாரத்தை உயர்த்த வேண்டியும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி சிறப்பாக செயல்படுத்திவருகிறார். இந்நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த பட்டம் மற்றும் பட்டயம் படித்த 29 பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரமும், 10 மற்றும் பிளஸ் 2 முடித்த பயனாளிகள் 29 பேருக்கு ரூ.25 ஆயிரமும் என மொத்தம் 752 பயனாளிகளுக்கு ரூ.2.25 கோடி நிதியுதவி தொகையும், தாலிக்கு தலா 8 கிராம் வீதம் மொத்தம் 6.016 கிலோகிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலர் விஜயலட்சுமி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் சமூகநலத்துறையின் சார்பாக திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் திட்டத்தின்கீழ்775 பயனாளிகளுக்கு ரூ.2.21 கோடி மதிப்பீட்டில் திருமண நிதியுதவியும், தாலிக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.2.79கோடி மதிப்பீட்டிலான 6.200 கிலோ கிராம் தங்க நாணயங்கள் என மொத்தம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவியை அமைச்சர் பொன்முடி பயனா ளிகளுக்கு வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x