Published : 15 Jul 2021 03:13 AM
Last Updated : 15 Jul 2021 03:13 AM

மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி குழுவினர் இன்று டெல்லி செல்கின்றனர்: பிரதமர் நரேந்திர மோடி, ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கின்றனர்

மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் ஆகியோரை சந்தித்து வலியுறுத்துவதற்காக, இன்று தமி ழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி குழுவினர் டெல்லி புறப் பட்டுச் செல்கின்றனர்.

காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஆண்டு தோறும் தமிழகத்துக்கு திறக்க வேண்டிய நீரை முழுமையாக கர்நாடகம் தருவதில்லை. இந் நிலையில், நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்ற தீர்ப்புகளுக்கு முர ணாக, காவிரியின் குறுக்கே மேகே தாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய நீர்வள ஆணையத்திடம் இருந்து கர்நாடக அரசு பெற்றுள்ளது.

ஆனால், கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தொடர்ந்து தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காவிரி மேலாண்மை வாரியத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும், மேகே தாட்டு அணை குறித்து கர்நாடக அரசு பிரச்சினை கிளப்பும் போதெல் லாம் அதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இருப்பினும், அணை கட்டும் முயற்சியை கர்நாடக அரசு தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலினும் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனும் மேகேதாட்டு அணை தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை வலியுறுத்தினர்.

தொடர்ந்து, கடந்த ஜூலை 12-ம் தேதி மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக விவாதிக்க, சட்டப் பேரவை அனைத்துக்கட்சிக் கூட் டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத் துழைப்பு அளிப்பதாக அனைத் துக் கட்சிகளின் தலைவர்களும் உறுதியளித்தனர். மேலும் அனைத் துக் கட்சிக்குழு டெல்லி சென்று இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதை உள்ளடக்கிய 3 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி தற்போது அணை கட்டும் முயற்சிகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது மிகவும் கண்டனத்துக்குரியது. எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்துக்கு, இதில் தொடர்புடைய மத்திய அர சின் அமைச்சகங்கள் எவ்வித அனுமதிகளையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளை தடுப்பதில் அரசு மேற்கொள்ளும் அனைத்து நட வடிக்கைகளுக்கும் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்கள் முழு ஆதரவையும் ஒத் துழைப்பையும் வழங்கும்.

இக்கூட்டத்தின் தீர்மானங்களை மத்திய அரசிடம் அனைத்து கட்சி யினரும் நேரில் சென்று முதல் கட்டமாக வழங்குவது என்றும், அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கை கள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது என்றும் தீர் மானிக்கப்பட்டது.

இதையடுத்து, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதை நிறைவேற்றும் வகையில், கூட்டத்தில் பங்கேற்ற திமுக, அதிமுக, பாஜக, காங் கிரஸ், மதிமுக, பாமக, இந்திய கம் யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் அடங்கிய அனைத்துக் கட்சிக் குழு இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறது.

தமிழக நீர்வளத் துறை அமைச் சர் துரைமுருகன் தலைமையில் செல்லும் இக்குழுவில், பொதுப் பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகளும் இடம் பெறுவார்கள். இன்று பிற்பகல் 1 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லி செல்லும் அவர்கள், நாளை ஜல் சக்தி அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து தமிழகத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானம் குறித்து வலி யுறுத்துகின்றனர்.

அத்துடன், நாளை மாலை பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டு, அனுமதி கோரப்பட் டுள்ளது. அனுமதி கிடைக்கும் நிலையில், பிரதமரையும் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று முன் தினம் மத்திய ஜல்சக்தி அமைச்சரை, கர்நாடக முதல்வர் எடியூரப்பா சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x