Published : 16 Feb 2016 07:40 AM
Last Updated : 16 Feb 2016 07:40 AM

சுற்றுச்சூழல் கல்வியை மாணவர்கள், பொதுமக்கள் மத்தியில் எப்படி எடுத்துச் செல்லலாம்? - நிபுணர்களுடன் நடிகர் சூர்யா முக்கிய ஆலோசனை

சுற்றுச்சூழல் கல்வியை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எப்படி எடுத்துச் செல்லலாம் என்பது குறித்து சுற்றுச்சூழல் துறை நிபு ணர்களுடன் நடிகர் சூர்யா நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சென்னை, காஞ்சி புரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளத்தில் சிக்கிய மக்களை மீட்பதில் இளைஞர்கள் பெரும் பங்காற்றினர். இந்த இளைஞர் சக்தியை ஒருங் கிணைத்து தமிழகத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பில் ஆக்கப்பூர்வ மான பணிகளை மேற்கொள்வதற் காக ‘யாதும் ஊரே’என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்த நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை, ‘தி இந்து’ குழுமம், புதிய தலை முறை குழுமம் ஆகியவை இணைந்து முடிவுசெய்தன.

‘யாதும் ஊரே’ திட்டத்தின் ஒரு பகுதியாக சுற்றுச்சூழல், நீர்நிலை பாதுகாப்பு குறித்த 2 நாள் கருத்தரங்கம், சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் அறிஞர்கள், பேராசிரியர்கள், சுற் றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மாணவ-மாண விகள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து, இந்த திட்டத்தில் இணைந்துள்ள தொண் டர்களுக்கு சென்னையில் அண்ணா நகர் எஸ்பிஓஏ மேல்நிலைப் பள்ளியிலும், டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியிலும் சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 6 அணி யாக ஏறத்தாழ 500 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், யாதும் ஊரே திட்டத்தின் அடுத்த கட்ட பணிகள் குறித்த கலந்துரையாடல் கூட்டம் சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடிகர் பிரகாஷ்ராஜின் பண்ணை தோட்டத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அகரம் அறக்கட்டளையின் நிறுவனரான நடிகர் சூர்யா சுற்றுச்சூழல் துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் டாக்டர் ஜெய வெங்கடேசன், பேராசிரியர் சுல் தான் அகமது இஸ்மாயில், பெங்களூர் கே.கே. ஆங்கில பள்ளி முதல்வர் எம்.ஏ.கான், உளவியல் நிபுணர் டாக்டர் விதுபாலா, சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் கல்வியாளர் திருநாவுக்கரசு, கோவை அருளகம் அமைப்பின் நிறுவனர் பாரதிதாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் கல்வியை பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர் கள், பொதுமக்கள் என 3 நிலை களில் கொண்டுசெல்வது குறித் தும், சுற்றுச்சூழல் கல்வி விழிப் புணர்வு திட்டங்களை எந்தெந்த வடிவங்களில் முன்னெடுத்துச் செல்லலாம் என்பது குறித்தும் விரிவாக விவாதித்தனர். சென்னை யில் ஒரு பள்ளியை தேர்வுசெய்து அதை பசுமை வளாகமாக (கிரீன் கேம்பஸ்) மாற்றலாம் என்றும், அதன்மூலம் சுற்றுச்சூழல் கல்வியை பாடத்தின் ஒரு பகுதியாக மாற்றி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க லாம் என்றும் நடிகர் சூர்யா யோசனை தெரிவித்தார். நிகழ்ச்சியை அகரம் அறக்கட்டளை செயலாளர் ஜெய தாமோதரன் ஒருங்கிணைத்தார்.

காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த கலந்துரையாடல் கூட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது. சுற்றுச்சூழல் கல்வி விழிப்புணர்வு திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்பும் பள்ளி, கல்லூரிகள் yadhum@agaram.in என்ற மின்னஞ் சல் முகவரியிலோ, 90256-01332 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்புகொள்ளலாம் என்று அகரம் அறக்கட்டளையின் நிறுவனரான நடிகர் சூர்யா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x