Published : 11 Feb 2016 08:55 AM
Last Updated : 11 Feb 2016 08:55 AM

காங்கிரஸ், தமாகாவில் விருப்ப மனு தாக்கல் தொடக்கம்

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், தமாகாவில் விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, தேர் தலை எதிர்கொள்ள அனைத்து அரசி யல் கட்சிகளும் தயாராகி வருகின்றன.

அதிமுக, திமுகவில் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்துள்ளது. அதிமுக வில் 26 ஆயிரத்து 174 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் முதல்வர் ஜெய லலிதாவுக்காக மட்டும் 7 ஆயிரத்து 936 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

திமுகவில் விருப்ப மனு தாக்கல் ஜனவரி 24 முதல் பிப்ரவரி 10-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 ஆயிரம் விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. தேமுதிகவில் கடந்த 5-ம் தேதி விருப்ப மனு தாக்கல் தொடங்கியது. கூட்டணி உறுதி செய்யப்படாததால் விருப்ப மனு அளிப்பதில் தேமுதிகவினர் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் காங்கிரஸ், தமாகா வில் விருப்ப மனு தாக்கல் நேற்று தொடங்கியது. காங்கிரஸில் முதல் நாளில் 800-க்கும் அதிகமானோர் விருப்ப மனுக்களைப் பெற்றுள்ளனர். காங்கிரஸ் மாநிலப் பொருளாளர் நாசே ராமச்சந்திரன், மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா, மாநிலப் பொதுச்செயலாளர் ஜோதி உள்ளிட்டோர் விருப்ப மனுக்களைப் பெற்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்காக மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம் உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்தனர். தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு மயிலாப்பூரில் போட்டியிட வலியுறுத்தி காங்கிரஸ் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

தமாகா

தமாகாவில் அந்தந்த மாவட்டங் களில் பிப்ரவரி 10 முதல் 12-ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தமாகா தலைமை அலுவலகத்தில் 8 மாவட்டங் களில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஜி.கே.வாசன் போட்டி யிட வலியுறுத்தி மாநில, மாவட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர்.

தமாகா துணைத் தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல் போன்ஸ் ஆகியோருக்காகவும் பலர் விருப்ப மனுக்களை அளித்தனர். தமிழ கம் முழுவதும் 234 தொகுதிகளிலும் முதல் நாளில் சுமார் 1,000-க்கும் அதிகமான தமாகாவினர் விருப்ப மனுக்களை அளித்துள்ளதாக அக்கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

காங்கிரஸ், தமாகாவில் விருப்ப மனு வுடன் பொதுத் தொகுதிக்கு ரூ. 5 ஆயிரமும், தனித் தொகுதிக்கு ரூ. 2,500-ம் செலுத்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x