Published : 10 Jul 2021 03:14 AM
Last Updated : 10 Jul 2021 03:14 AM

‘இதயம் டிரஸ்ட்’ காப்பகத்துக்கு அழைத்து செல்லாதீர்கள்: அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முதியவர்கள் வேண்டுகோள்

மதுரையில் தனியார் காப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட முதியவர்கள், மீண்டும் அந்தக் காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் எனக் கதறியதால் பரபரப்பு ஏற் பட்டது.

மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே ‘இதயம் டிரஸ்ட்' என்ற பெயரில் முதியோர் காப்பகம் நடத்தியவர் சிவக்குமார்.

இவரது காப்பகத்தில் ஆதர வற்றோர், கணவரை இழந்த பெண்கள், குழந்தைகள் என 80-க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

கடந்த 13-ம் தேதி இக்காப் பகத்தில் தங்கியிருந்த மேலூர் பகுதியைச் சேர்ந்த ஐஸ்வர்யாவின் 1 வயது ஆண் குழந்தையை காப்பக நிர்வாகிகள் விற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி காப்பக உரிமையாளர் சிவக் குமார், மதர்சா, கலைவாணி மற்றும் குழந்தைகளை விற்க உதவிய செல்வி, ராஜா ஆகி யோரைக் கைதுசெய்தனர்.

இந்நிலையில் காப்பகத்தில் தங்கியிருந்தவர்களை போலீஸார், குழந்தைகள் நலக்குழுவினர் மீட் டனர். 25-க்கும் மேற்பட்ட முதி யோர், மூதாட்டிகளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மற்றவர்கள் வேறு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நலமடைந்த முதியவர்களை வேறு காப்பகத்துக்குக் கொண்டு செல்லும் முயற்சியில் மாவட்ட நிர்வாக உத்தரவின்பேரில் சமூக நலத்துறையினர், ரெட் கிராஸ் அமைப்பினர், பாஜக வழக்க றிஞர்கள் ஈடுபட்டனர்.

அப்போது, இதயம் டிரஸ்ட் காப்பகத்துக்கு கொண்டு செல் லக்கூடாது, அங்கு தங்களுக்கு சரியாக உணவளிக்காமல் கஷ்டப்படுத்தியதாக கதறினர்.

இதுகுறித்து வழக்கறிஞர் முத்துக்குமார் ஆட்சியரிடம் கொடுத்த மனு ஒன்றில், ‘‘குழந்தைகளை கடத்தி விற்ற இதயம் டிரஸ்ட் காப்பகத்தில் தங்கியிருந்தவர்களை கொடுமைப்படுத்தியதாக தகவல் வெளியானது. மூதாட்டி ஒருவர் கூறுகையில், ‘‘எனது முதியோர் உதவித்தொகை, வீட்டு வாடகையை டிரஸ்ட் ஊழி யர்கள் அபகரித்தனர். என்னை அடித்து துன்புறுத்தினர். என்னை அங்கே மீண்டும் அழைத்துச் செல்ல வேண்டாம்” என மறுத்தார். இது போன்று சிலரும் கூறியதால் அங்கு மனித உரிமை மீறல் நடந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க அனைத்து காப்பகங்களையும் கண்காணிக்க வேண்டும் என மனுவில் குறிப் பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x