Published : 02 Feb 2016 08:58 AM
Last Updated : 02 Feb 2016 08:58 AM

மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக புகார்

ஆசிரியர்களை மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணி, ஆதார் அடையாள அட்டை உள் ளிட்ட இதர பணிகளில் ஈடுபடுத்து வதால் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தேர்தல் பணிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பணிகளில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். இவற்றில் வருடம்தோறும் ஏதாவது ஒரு பணி, ஆசிரியர்களுக்கு தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும். இவை தவிர அவ் வப்போது எஸ்எஸ்ஏ, ஆர்எம்எஸ்ஏ பயிற்சியும் இருக்கும்.

தற்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். மாலையில் பள்ளி முடிந்த பின்னரும், விடுமுறை நாட்களிலும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அவர் கள் விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தில் பெய்த கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகள் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி களுக்கு ஒரு மாதத்துக்கு மேலாக விடுமுறை விடப்பட்டது. இதனால், பள்ளிகளில் கற்றல்-கற்பித்தல் பணி பெரிதும் பாதிக்கப்பட்டது.

தொடர் மழை விடுமுறை காரணமாக, பாடங்களை விரைந்து முடிக்க வேண்டிய கட்டாய சூழலுக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் பொதுத்தேர்தல் நடத்தப்பட இருப்பதால் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள், வாக்குப்பதிவு என அடுத்தடுத்து நிறைய பணிகள் காத்திருக்கின்றன. ஆசிரியர்களை தேர்தல், மக்கள்தொகை கணக் கெடுப்பு என வேறு பணிகளில் ஈடுபடுத்துவதால் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினை குறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பனிடம் கேட்டபோது, “தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணி களில் ஆசிரியர்களை ஈடுபடுத்து வதால் பள்ளிகளில் மாணவர்களின் படிப்பு நிச்சயம் பாதிக்கப்படும். ஆசிரியர்களுக்கு இத்தகைய பணிகள் எல்லாம் மாவட்ட நிர்வாகங்கள் மூலமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இந்தப் பிரச்சி னைக்கு அரசுதான் தீர்வு காண வேண்டும்” என்றார். தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட பணிகளை ஆசிரியர் களுக்கு ஒதுக்குவது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கல்வித் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோ சிப்பது கிடையாது என்ற குற்றச்சாட்டும் பரவலாக உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங் களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) ஒருங்கிணைப்பாளர் இளமாறன் கூறும்போது, “மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சி, வாக்குப்பதிவு பணி, ஆதார் அட்டை, மக்கள்தொகை கணக்கெடுப்பு என ஆண்டுமுழுவதும் ஏதாவது ஒரு பணியில் ஈடுபடுத்தப்படுவதால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. ஆசிரியர்களின் கற்பித்தல் பணியும் பாதிப்புக்கு உள்ளாகிறது. அதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கான 14 விதமான நலத்திட்ட உதவிகளையும் ஆசிரி யர்களை செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட இது போன்ற பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது.

இப்பணிகளை செய்ய நிரந்தர பணியாளர்களை நியமிக் கலாம். இதனால், புதிய வர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆசிரியர்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் பள்ளி களில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x