Published : 07 Jul 2021 03:12 AM
Last Updated : 07 Jul 2021 03:12 AM

சர்வதேச சாக்லேட் தினத்தையொட்டி ‘இந்து தமிழ் திசை’ வழங்கும் ‘குக் வித் சாக்லேட்’ சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி: ஜூலை 16-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது

சர்வதேச சாக்லேட் தினத்தை(ஜூலை 7) முன்னிட்டு ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் ‘குக் வித்சாக்லேட்’ என்ற சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி ஜுலை 16-ம் தேதிதொடங்கி, 3 நாட்கள் நடக்கிறது.

கரோனா ஊரடங்கால் வீடுகளிலேயே தனித்திருக்கும் குழந்தைகள், பெற்றோருக்கு பயன்படும் வகையில், சர்வதேச சாக்லேட் தினத்தை முன்னிட்டு ‘இந்து தமிழ்திசை’ நாளிதழ் சார்பில் சாக்லேட்செய்யக் கற்றுத் தரும் ‘குக் வித்சாக்லேட்’ என்ற சிறப்பு ஆன்லைன் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

40 ஆண்டுகால சமையல் அனுபவமிக்க செஃப் அசோக்குமார் இதை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சிஜூலை 16, 17, 18 ஆகிய 3 நாட்கள்,தினமும் மாலை 6 முதல் 7 மணி வரை ஆன்லைனில் நடக்கும்.

இதில் சாக்லேட் ஸ்பான்ஜ், சார்ட் கிரஸ்ட் பேஸ்ட்ரி, சோகோ சிப்ஸ் குக்கீஸ், சாக்லேட் சபயன் கட்டன், பிளாக் ஃபாரஸ்ட், ஒயிட் ஃபாரஸ்ட், சாக்லேட் டிரஃபிள் கேக், பட்டர் ஸ்காட்ச் பிரலைன் உள்ளிட்ட சாக்லேட் தயாரிப்புகள் குறித்து விளக்கப்படும். கேட்டரிங் படிக்கும் மாணவர்களும் இதில் பங்கேற்கலாம். வீட்டிலேயே சுவையான சாக்லேட் செய்வதற்கான நுணுக்கங்களைக் கற்றுத்தருவதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

இதில் பங்கேற்க லேப்டாப் அவசியம். பங்கேற்க விரும்புவோர்பதிவுக் கட்டணமாக ரூ.249/- செலுத்தி https://rb.gy/cxo6kpஎன்ற லிங்க்கில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்த நிகழ்வின் கிச்சன் பார்ட்னராக கோவை ஹோட்டல் கிஸ்கால் கிராண்ட், தயாரிப்பு பார்ட்னராக கோவை அபிராமி என்டர்பிரைசஸ் நிறுவனமும் இணைந்துள்ளன. கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x