Published : 28 Jun 2021 12:17 PM
Last Updated : 28 Jun 2021 12:17 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேருந்து சேவை தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து அரசுப் பேருந்து சேவை இன்று (ஜூன் 28) தொடங்கியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, பொன்னமராவதி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, இலுப்பூர் உள்ளிட்ட போக்குவரத்துக் கிளைகளில் இருந்து 301 புறநகர் மற்றும் 116 நகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஊரடங்கினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து சேவையானது, புதுக்கோட்டை உட்பட 23 மாவட்டங்களில் இன்று மீண்டும் தொடங்கியது.

அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் புறநகர் பேருந்துகள் 150, நகர் பேருந்துகள் 139 என மொத்தம் 289 பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டதை ஆட்சியர் கவிதா ராமு ஆய்வு செய்தார்.

அப்போது, அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதோடு, 50 சதவீதம் பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

சுமார் 48 நாட்களுக்குப் பிறகு பேருந்துகள் இயக்கப்பட்டதையடுத்து பயணிகள் உற்சாகமாகப் பயணத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்துக் கழக புதுக்கோட்டை மண்டலப் பொது மேலாளர் இளங்கோவன், துணை மேலாளர் (வணிகம்) சுப்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x